“ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” தமிழ்மொழி விழா சிங்கப்பூரில் ஏற்பாடு

16 Apr, 2026 | 03:24 PM
image

சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் கடந்த 20 ஆண்டுகளாக ஏப்ரல் மாதத்தில் நடைபெற்று வரும் தமிழ்மொழி விழாவின் ஒரு அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் தனது 13வது ஆண்டாக ஏற்று நடத்தும் தமிழ்மொழி விழாவில் “ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” என்ற தலைப்பில் உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்து படைக்கும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். 

அந்த நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 19ஆம் திகதி உமறுப்புலவர் அரங்கில் மாலை 5:30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில் சிறப்புப் பேச்சாளர்களாக ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவரும் பொதுநல ஆர்வலரும் வழக்கறிஞருமான த. ஸ்டாலின் குணசேகரன் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் தமிழ் ஆர்வலர் சிங்கை முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

இந்த ஆண்டு பல உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரிகளிலிருந்து சுமார் 70 மாணவர்கள் கலந்துகொண்டு “ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” என்ற தலைப்பில் தங்களின் ஆய்வினை கடந்த மார்ச் 29ஆம் திகதி படைத்தனர். 

நடுவர்களாக முனைவர் உஷா சுப்புசாமி,  நாராயணன் ஆண்டியப்பன், இசக்கிசெல்வி கோவிந்தன், மஹ்ஜபீன், மாலதி பாலா மற்றும் சுவர்ணலட்சுமி ஜெயராமன் பங்குபற்றினர்.

ஏப்ரல் 19ஆம் திகதி விழாவன்று போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் அவர்களது ஆய்வினை மீண்டும் படைப்பார்கள். அத்துடன் வெற்றி பெற்ற மாணவர்கள், நடுவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

இதில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கப்பரிசும் சான்றிதழும் வழங்கப்படவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலைமாமணி டாக்டர் இரா. தினகரன், முஹம்மது இர்ஷாத் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் சிங்கப்பூர் கட்டுமானத்துறை ஆணையர் Er தனபால் காளியண்ணனும் கலந்துகொள்வார். 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். அனைவருக்கும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02