ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த லவ் இன்சூரன்ஸ் கம்பனி படக் குழு

16 Apr, 2026 | 03:30 PM
image

'ஹாட்ரிக் ஸ்டார் 'பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்து வெளியான 'லவ் இன்சூரன்ஸ் கம்பனி' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து பட மாளிகைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த படக் குழு வெற்றிக்கு வித்திட்ட ரசிகர்களுக்கும் , ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதற்காக சென்னையில் நடைபெற்ற நன்றி நவிலும் விழாவில் இயக்குநர் ஜெகன்- நடிகை கௌரி ஜி கிஷன் - நடிகை கிருத்தி ஷெட்டி , நடிகை தீபிகா வெங்கடாசலம் , நடிகர் எஸ் ஜே சூர்யா , பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், '' இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டுவர முடிந்தது. அந்த கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும் போது அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு எதுவும் இல்லை.

எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தாலும் இன்று மக்கள் இந்த படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

29 - திரைப்பட விமர்சனம்

2026-05-11 16:47:59
news-image

ஜூன் மாதத்தில் வெளியாகும் புதுமுகங்கள் நடித்திருக்கும்...

2026-05-11 16:27:20
news-image

நடிகர் சூர்யாவின் 'கருப்பு' படத்தின் முன்னோட்டம்...

2026-05-11 16:26:17
news-image

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் 'வாரண்ட்'...

2026-05-11 16:17:16
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-11 15:15:36
news-image

ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தீப் கிஷன்...

2026-05-11 15:14:08
news-image

ஓகஸ்டில் ரசிகர்களை 'ஐ அம் கேம்...

2026-05-11 15:04:47
news-image

காதலும், இன்னிசையும் கலந்து தயாராகும் 'சைக்கிள்...

2026-05-11 14:58:11
news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52