தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபலமான நடிகரான சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'பவர் பேட்டா' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் 'பவர் பேட்டா' திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
மதி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மணி சர்மா இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான எக்சன் திரைப்படமாக தயாராகும் இந்த திரைப்படத்தை 70 எம் எம் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விஜய் சில்லா மற்றும் ஷஷி தேவி ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காதல் - கௌரவம் - அரசியல் - ஆகிய வாசகங்கள் இடம்பிடித்திருப்பதாலும் கதை களம் தொடர்பான அழுத்தமான குறியீடுகளுடன் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருப்பதாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM