ஜனாதிபதி அலுவலக ஊழியர்களுக்கு செயலாளர் விடுத்துள்ள முக்கிய அழைப்பு: மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை!

16 Apr, 2026 | 03:12 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதி அலுவலக பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின்னர், ஜனாதிபதி அலுவலக பணியாளர்கள் புத்தாண்டுக்கான தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு,  இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்  போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர்,  பணியாளர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்களுடன் சுமூகமாக உரையாடினார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கடந்த ஆண்டின் தவறுகள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்த்து, புதிதாக சிந்தித்து புதிய மனப்பாங்குகளுடன் முன்னேறிச் செல்வதற்குப் புத்தாண்டுப் பிறப்பு ஒரு சிறந்த வாய்ப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

அதன்படி, நாட்டின் பிரதான அரச நிறுவனம் என்ற வகையில் ஜனாதிபதி அலுவலகம் கடந்த ஆண்டில் ஆற்றிய பணிகளை மீளாய்வு செய்து, அந்த அனுபவங்களுடன் புத்தாண்டில் திட்டங்களை வகுப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர்,  இதுவரை ஆற்றிய பணிகளுக்காக பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி,ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான கபில ஜனக பண்டார, ரோஷன் கமகே உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23