இந்தியாவின் ஆந்திராவில் ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் மீது டேங்கர் லொரி மோதியதில் கர்நாடகாவைச் சேர்ந்த 8 பேர் பலியாகினர்.
ஆந்திராவில் உள்ள மந்திராலயா ஸ்ரீ ராகவேந்திரா கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் வேனில் சென்றுகொண்டிருந்தனர்.
இன்று (16) அதிகாலை, கர்னூல் மாவட்டத்தில் உள்ள கல்லுதேவகுண்டா கிராமத்தின் அருகே சென்றுகொண்டிருந்த வேளையில், எதிர்த்திசையில் வேகமாக வந்த சிமென்ட் கலவை ஏற்றிய டேங்கர் லொரி, வேன் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 5 பெண்கள், 3 வயது குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்திற்கு காரணம் ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது வேறு ஏதாவதா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM