மொசாட் அமைப்பு தொடர்பான குற்றச்சாட்டு :  ஈரானில் 35 பேர் கைது 

16 Apr, 2026 | 12:06 PM
image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக உளவு பார்த்தல், சட்டவிரோத கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில், மொசாட் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்புடன் தொடர்புடைய நபர்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கைகள் நாட்டின் ஆறு மாகாணங்களில் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. தொடர்ந்து இடம்பெற்ற தாக்குதல்களில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பதற்ற நிலைமையின் மத்தியில், கடந்த 8 ஆம் திகதி இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 40 நாட்களாக நீடித்திருந்த பதற்றம் ஒரு அளவிற்கு குறைந்தது.

இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இரு தரப்புகளுக்கும் இடையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரத்தில் அல்லது அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தானில் உள்ள ஈரானிய தூதரகத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்பு

2026-05-09 20:13:55
news-image

தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க...

2026-05-09 19:49:54
news-image

ஆளுநரை சந்திக்காமல் இடைநடுவிலேயே திரும்பினார் விஜய்

2026-05-09 18:24:17
news-image

தமிழக ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் த.வெ.க...

2026-05-09 18:16:29
news-image

“118” இலக்கையும் கடந்து 120ஐ பெற்று...

2026-05-09 17:48:21
news-image

த.வெ.கவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

2026-05-09 17:55:09
news-image

த.வெ.க-வின் பலம் 118 ஆக உயர்வு:...

2026-05-09 20:59:16
news-image

“வெற்றி வெற்றி வெற்றி... ; விஜய்...

2026-05-09 17:12:08
news-image

தமிழக அரசியலின் பரபரப்புக்கு மத்தியில் ஆளுநர்...

2026-05-09 21:01:12
news-image

விஜய்யைச் சந்திக்கத் துணியும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்?...

2026-05-09 20:33:20
news-image

திருமாவளவன் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு? -...

2026-05-09 16:30:17
news-image

த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவளிப்பாரா திருமாவளவன்?...

2026-05-09 14:07:54