பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள் நிலையில் பெங்களூரு முன்னிலை

Published By: Vishnu

15 Apr, 2026 | 11:47 PM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு எம். சின்னசுவாமி விளையாட்டரங்கில் புதன்கிழமை (15) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 8 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலிடத்தை அடைந்தது.

ராசிக் சலாம், புவ்ணேஷ்வர் குமார், க்ருணல் பாண்டியா, ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றியை இலகுவாக்கின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் எதிரணியின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமப்பட்டு 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களுக்கு சுருண்டது.

போதாக் குறைக்கு 4ஆவது ஓவரில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் வீசிய கடைசிப் பந்து ரிஷாப் பான்டின் இடது முழங்கையைப் பதம் பார்க்க வலி தாங்க முடியாதவராக முதலுதவி சிகிச்சையுடன் தற்காலிகமாக களம் விட்டு வெளியேறினார்.

அவர் 16ஆவது ஓவரில் மீண்டும் துடுப்பெடுத்தாட வந்தபோதிலும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் ஒரு ஓட்டத்துடன் 6ஆவதாக ஆட்டம் இழந்தார்.

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் மிச்செல் மார்ஷ் (40), மத்திய வரிசை வீரர்களான அயுஷ் படோனி (38), முகுல் சௌதரி (39 ஆகிய மூவரே 35 ஓட்டங்களக்கு மேல் பெற்றனர்.

ராசிக் சலாம் மிகத் திறமையாக பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி ஐபிஎல் இல் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்தார்.

புவ்ணேஷ்வர் குமார் 27 ஓட்டங்ளுக்கு 3 விக்கெட்களையும் க்ருணல் பாண்டியா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

147 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 15.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 9 ஓட்டங்களாக இருந்தபோது ஃபில் சோல்ட் (7) ஆட்டம் இழந்ததால் அணி சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், விராத் கோஹ்லி, தேவ்டத் படிக்கல் (10) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு தெம்பைக் கொடுத்தனர்.

ஆனால் அதன் பின்னர் சீரான இடைவேளயில் அணித் தலைவர் ராஜத் பட்டிதார் (27), விராத் கோஹ்லி (49), ஜிட்டேஷ் ஷர்மா (23) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். (122 - 5 விக்.)

தொடர்ந்து டிம் டேவிட் (14 ஆ.இ.), ரொமாரியோ ஷெப்பர்ட் (14) ஆகிய இருவரும் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ப்றின்ஸ் யாதவ் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆவேஷ் கான் 23  ஓட்டங்களுக்கு   2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஜொஷ் ஹேஸ்ல்வூட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26
news-image

கூப்பர் கொனலியின் சதம் வீண்போனது; பஞ்சாபை...

2026-05-07 11:34:54
news-image

பரபரப்பான முடிவை நோக்கி தம்புள்ளை -...

2026-05-07 09:18:58
news-image

சம அளவில் மோதப்படும் தேசிய சுப்பர்...

2026-05-06 09:33:01
news-image

சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிக்கு சஞ்சு...

2026-05-06 09:27:53
news-image

லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026க்கான...

2026-05-05 23:06:59