திருமணத்திற்கு பிறகு பெண்கள் கருத்தரித்திருக்கும் போது பிரசவ தருணத்திற்காக தவிப்புடன் காத்திருப்பர் . இத்தகைய தருணங்களில் பல பெண்மணிகளுக்கு சிசேரியன் எனப்படும் சத்திர சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெறும் . இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் ஒலிஹைட்ராம்னியோஸ் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பனிக்குட நீர் குறைபாடும் ஒரு காரணமாகும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
ஒலிகோஹைட்ராம்னியோஸ் என்பது கருவுற்றிருக்கும் காலத்தில் தாயின் வயிற்றில் இருக்க வேண்டிய பனிக்குட நீரின் அளவு ...இயல்பான அளவைவிட மிக குறைவாக இருக்கும் ஒரு நிலையாகும். பொதுவாக பனிக்குட நீர் என்பது கர்ப்ப காலத்தில் கருவை சூழ்ந்திருக்கும் திரவ அமைப்பாகும். இது வயிற்றில் வளரும் கருவை நோய் தொற்று மற்றும் தொப்புள் கொடியின் அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பதுடன் அதன் அசைவுகளுக்கு இதமாகவும் இடமளிக்கிறது. மேலும் பனிக்குட நீர் என்பது கருவின் செரிமான மற்றும் சுவாச மண்டலங்களின் வளர்ச்சிக்கும் , அதன் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது.
இந்த தருணத்தில் சில பெண்மணிகளுக்கு பிரசவ தருணங்களில் பனிக்குட நீர் இயல்பான அளவை விட குறைவாக இருந்தால்... கருவில் உள்ள சிசுவிற்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். இது குழந்தை பிறந்த பிறகு அதன் வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும். மேலும் பிரசவத்தின் போது சிக்கலான சூழலையும் உண்டாக்கும்.
இத்தகைய குறைபாடு இருப்பது பெண்மணிகளுக்கு அதிக அளவில் தெரியாது. அவர்கள் கருவின் வளர்ச்சியை அளவிடுவதற்காக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது இவை கண்டறியப்படுகிறது. இத்தகைய பாதிப்பு பொதுவானது என்பதும் ,உலக அளவில் நான்கு சதவீத பெண்மணிகளுக்கு பனிக்குட நீர் குறைபாடு ஏற்படுகிறது என்றும் அதிலும் கருவுற்றிருக்கும் தருணங்களில் கடைசி மூன்று மாதங்களில் இத்தகைய பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது என்றும் வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பிறப்பு உறுப்பில் இருந்து திரவ கசிவு, கருப்பையின் அளவில் சமச்சீரற்ற நிலை, கருவின் அசைவுகளை உணர இயலாத நிலை.. ஆகியவையே இதற்றின் அறிகுறிகள் ஆகும்.
தாயிற்கும் சிசுவிற்கும் இணைப்பு பாலமாக இருக்கும் நஞ்சுக்கொடியில் உண்டாகும் சிக்கல்கள்- உயர் குருதி அழுத்தம்- நீர்ச்சத்து குறைபாடு- என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் குறைமாத மாத பிறப்பாகவும், சிசேரியன் பிரசவமாகவும் நிகழும். மேலும் இத்தகைய குறைவான பனிக்குட நீரின் அளவு காரணமாக சிக்கல் ஏதுமற்ற நிலையில் வைத்தியர்கள் பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் பிரசவங்கள் செய்து தாயையும், சேயையும் காப்பாற்றி வருகிறார்கள்..
வைத்தியர் ஸ்ரீ தேவி
தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM