108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்) பட்மின்டன் போட்டியில் இலங்கையின் கயன்திக்கு தங்கம், வெள்ளி

15 Apr, 2026 | 05:22 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் ஹெட்ஃபீல்ட் உள்ளக அரங்கில் நடைபெற்ற 108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்) பட்மின்டன் போட்டிகளில் இலங்கையின் நடீஷா கயன்தி 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் கலப்பு இரட்டையர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற ஒற்றையர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஜோ கோப்ஸ்டேக் என்வரை எதிர்த்தாடிய நடிஷா கயன்தி மிக இலகுவாக 2 நேர் செட்களில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்துடன் சம்பியனானர்.

இப் போட்டியின் இரண்டு செட்களிலும் 21 - 11, 21 - 11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நடீஷா கயன்தி வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதனைத் தொடர்ந்து 12ஆம் திகதி நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் நடீஷா கயன்திக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

இங்கிலாந்து வீரர் ரொஹான் கப்பூருடன் ஜோடி சேர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் நடீஷா கயன்தி போட்டியிட்டார்.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ஜோடியினரான டேவிட் ரே, ஹெலன் ஃபிஷர் ஆகியோரிடம் ரொஹான் கப்பூர், நடீஷா கயன்தி ஜோடியினர் 14 - 21, 12 - 21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தனர்.

பலப்பிட்டியவைப் பிறப்பிடமாகக் கொண்ட நடீஷா கயன்தி கடந்த வருடம் தாய்லாந்தின் பத்தாயாவில் நடைபெற்ற உலக சிரேஷ்ட பட்மின்டன் போட்டியில் 40 வயதுக்கு மேற்பட்ட கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

இங்கிலாந்தில் பாடமின்டன் போட்டிகளில் பங்குபற்றி தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களை வென்றெடுத்த நடீஷா கயன்தி, இன்று புதன்கிழமை (15) காலை நாடு திரும்பினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26
news-image

கூப்பர் கொனலியின் சதம் வீண்போனது; பஞ்சாபை...

2026-05-07 11:34:54
news-image

பரபரப்பான முடிவை நோக்கி தம்புள்ளை -...

2026-05-07 09:18:58
news-image

சம அளவில் மோதப்படும் தேசிய சுப்பர்...

2026-05-06 09:33:01
news-image

சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிக்கு சஞ்சு...

2026-05-06 09:27:53
news-image

லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026க்கான...

2026-05-05 23:06:59