களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை ; உரிய வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published By: Vishnu

14 Apr, 2026 | 11:42 PM
image

களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில் 57.5  கிலோ கிராம் ஏற்கனவே இறந்த கோழிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை சித்திரை வருடப்பிறப்பான செவ்வாய்கிழமை (14) பொதுச் சுகாதார பரிசோதகரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், உரிய வியாபாரிக்கு எதிராக் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட இறைசிக் கடைகள் அனைத்தும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரினால் விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கையின் பிரகாரம் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த குறித்த திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது கோழி இறைச்சி கடையொன்றினுள் 57.5 கிலோ கிராம் ஏற்கனவே இறந்த கோழிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்வாறாக பாவனைக்கு உதவாத ஏற்கனவே இறந்த கோழி  இறைச்சியை குளிர்சாதனப்பட்டியில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நபருக்கு எதிராக  களுவாஞ்சிகுடி பிரிவுக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் த.கஜானனினால்; விற்பனையாளருக்கு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன்  விற்பனையாளருக்கு எதிராக வழக்கு தாக்கலும் செய்யப்பட்டுள்ளர்.

குறித்த வியாபாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி அனைத்தும் உடன் பொதுச் சுகாதார பரிசோதகரால் அழிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23