நான் இன்வாஸிவ் வென்டிலேசன் எனும் நவீன செயற்கை சுவாச சிகிச்சை முறையால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

14 Apr, 2026 | 02:30 PM
image

இன்றைய சூழலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகளை வைத்தியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அவர்களின் சுவாசத்திற்காக நான் இன்வாசிவ் வென்டிலேஷன் எனப்படும் ஊடுருவாத செயற்கை சுவாச சிகிச்சையை உடனடி நிவாரண சிகிச்சையாக மேற்கொள்கிறார்கள்.

  எம்மில் பலருக்கும் இத்தகைய சிகிச்சையால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்று ஐயம் இருக்கிறது. இது தொடர்பாக வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

ஓஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் , சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் , நுரையீரல் நீர்க்கோர்வை , நிமோனியா காய்ச்சல்,  விலா எலும்பு முறிவு பாதிப்பு,  சுவாச கோளாறு அல்லது சுவாச செயலிழப்பு, தூக்கத்தில் ஏற்படும் மூச்சு திணறல் ஆகிய பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு வைத்தியர்கள் இத்தகைய நான் இன்வாசிவ் வென்டிலேஷன் எனும் சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இந்த கருவி நீங்கள் சுவாசிக்கும் போது கூடுதலான பலன்கள் வழங்குகிறது. அதாவது நீங்கள் சுவாசிக்கும் போது அதிக அளவில் ஓக்சிஜனை உள்ளே இழுக்கவும் நீங்கள் மூச்சை வெளியேற்றும் போது அதிக அளவில் கார்பன் டை ஓக்சைடை வெளியேற்றவும் இத்தகைய கருவி உதவுகிறது.

இதனால் சுவாச திணறல் ஏற்படும்போது உங்களுடைய மார்பு தசைகளுக்கு ஓய்வு கிடைத்து, அதற்குரிய முயற்சியை குறைக்கிறது. உள்ளிழுக்கும் போது காற்றின் ஓட்டம் மற்றும் அதன் அழுத்தம் அதிகமாகவும் வெளியே விடும் போது அதன் அழுத்தம் குறைவாகவும் இருக்க உதவுகிறது. மேலும் இந்த கருவி உங்களுடைய காற்றுப் பாதைகளை தொடர்ந்து திறந்து வைத்திருப்பதால்... நுரையீரலுக்கு அதிக அளவில் காற்று சென்று வருவதற்கு உதவி புரிகிறது.

நீண்ட காலமாக சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கும் அல்லது திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு தற்காலிகமாக சுவாசிப்பதில் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இத்தகைய ஊடுருவாத செயற்கை சுவாச சிகிச்சை அவசியமாகும்.

இவை உயிர் காக்கும் சிகிச்சை முறை என்றாலும் இதனை தவறாக பாவித்தால் சிலருக்கு வயிறு உப்புசம் ஏற்படக்கூடும். ஏனெனில் இவர்கள் அதிக அளவில் காற்றை விழுங்குவதால் இத்தகைய நிலை ஏற்படலாம். வேறு சிலருக்கு குருதி அழுத்தத்தில் இயல்பான அளவைவிட குறைந்த நிலை ஏற்பட்டு, அது தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள், தாதியர் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் தொடர்ந்து உங்களை துல்லியமாக அவதானிப்பதால் இத்தகைய பக்க விளைவுகள் ஏற்படாமல் தடுத்திட  இயலும். மிகச் சிலருக்கு இத்தகைய சிகிச்சை காரணமாக நுரையீரலில் பாதிப்பு ஏற்படக்கூடும். ஆனால் அதனை வைத்தியர் துல்லியமாக அவதானித்து அதற்கும் முழுமையான நிவாரண சிகிச்சையை வழங்குவர்.

பெரும்பாலும் இத்தகைய நான் இன்வாசிவ் வென்டிலேஷன் சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட தருணத்திற்குப்பிறகு சுவாசிப்பதில் இயல்புநிலை ஏற்பட்டால்.. இதனை வைத்தியர்கள் அகற்றி விடுவர்.

வைத்தியர் ஸ்ரீ காந்த்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டோகோஃபோபியா எனும் திருமணமான பெண்களுக்கு ஏற்படும்...

2026-05-11 16:55:02
news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07
news-image

அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-04-24 17:37:23