எங்கள் கப்பல்களை யாரும் தொட்டால் அனுமதிக்க மாட்டோம் - அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

14 Apr, 2026 | 01:09 PM
image

ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்மூஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

நேற்று மாலை முதல் இந்த முற்றுகை தொடங்கும் என அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து ஈரானிய கப்பல்களும் தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் 40 வீத எண்ணெய் இறக்குமதி மற்றும் 30 வீத இயற்கை எரிவாயு தேவைகள் ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே நிறைவேறுகின்றன.

இதனால், அமெரிக்க நடவடிக்கை சீனாவின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இதற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“எங்கள் கப்பல்களை யாரும் தொட்டால் அனுமதிக்க மாட்டோம்… இது எங்கள் உள்நாட்டு விவகாரம்” என சீனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் சீனக் கப்பல்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஈரான் புரட்சிகர காவல்படை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

“எங்கள் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள எந்த துறைமுகத்திற்கும் பாதுகாப்பு உறுதி இல்லை” என ஈரான் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை விவகாரம் தற்போது உலகளாவிய பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா – சீனா – ஈரான் இடையிலான இந்த மோதல், உலக பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையே தங்கள் துறைமுகங்கள் குறிவைக்கப்பட்டால் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள எந்த துறைமுகத்தின் பாதுகாப்புக்கும் உறுதியளிக்க முடியாது என ஈரான் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11
news-image

17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்...

2026-05-11 11:13:00
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பொலிஸ்...

2026-05-10 14:50:25
news-image

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது -...

2026-05-10 13:09:10