46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது!

14 Apr, 2026 | 12:12 PM
image

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த ,  இலங்கையர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று அதிகாலை 12.52 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த 04 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 46 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் உற்பத்தியான 'மென்செஸ்டர்'  ரகத்தைச் சேர்ந்த 31,000 சிகரெட்டுகள் அடங்கிய 155 கார்ட்டூன் சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இது தொடர்பில்  விசாரணைகளில் ஈடுபட்ட அதிகாரிகள், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அனைத்து சிகரெட்டுகளையும் அரசுடைமையாக்கியதுடன், குறித்த நபருக்கு 155,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23