ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

14 Apr, 2026 | 11:52 AM
image

(இணையத்தள சர்வதேச செய்தி பிரிவு)

ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரிக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய தாக்குதல் சுமார் 6 வாரங்களாக நீடித்தது.

இதையடுத்து கடந்த 7ஆம் திகதி இரு வாரங்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் பதற்றம் சற்றே தணிந்தது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே சமரசம் ஏற்படுத்த பாகிஸ்தான் முன்வந்தது. அமைதி பேச்சுவார்த்தைக்காக ஈரான் பிரதிநிதிகள் குழு இஸ்லாமாபாத் நகரை சென்றடைந்தது.

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவும் கலந்து கொண்டது.

சுமார் 21 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை உடனடியாக தாக்கி அழிக்க அமெரிக்க இராணுவம் தயாராக உள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் கடற்படை பலம் குறைந்திருந்தாலும், அதிவேக சிறிய கப்பல்கள் இன்னும் உள்ளன. அவற்றை அழிக்க கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகளை எதிர்கொள்ள பயன்படுத்திய நடைமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரிக்கும்  அபாயம் நிலவி வருகிறது. இதனால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்பு

2026-05-09 20:13:55
news-image

தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க...

2026-05-09 19:49:54
news-image

ஆளுநரை சந்திக்காமல் இடைநடுவிலேயே திரும்பினார் விஜய்

2026-05-09 18:24:17
news-image

தமிழக ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் த.வெ.க...

2026-05-09 18:16:29
news-image

“118” இலக்கையும் கடந்து 120ஐ பெற்று...

2026-05-09 17:48:21
news-image

த.வெ.கவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

2026-05-09 17:55:09
news-image

த.வெ.க-வின் பலம் 118 ஆக உயர்வு:...

2026-05-09 20:59:16
news-image

“வெற்றி வெற்றி வெற்றி... ; விஜய்...

2026-05-09 17:12:08
news-image

தமிழக அரசியலின் பரபரப்புக்கு மத்தியில் ஆளுநர்...

2026-05-09 21:01:12
news-image

விஜய்யைச் சந்திக்கத் துணியும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்?...

2026-05-09 20:33:20
news-image

திருமாவளவன் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு? -...

2026-05-09 16:30:17
news-image

த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவளிப்பாரா திருமாவளவன்?...

2026-05-09 14:07:54