ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மொத்த பணப்பரிசு 276 கோடியே 45 இலட்சம் ரூபா

Published By: Vishnu

13 Apr, 2026 | 10:26 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள 10ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 8,764,615 அமெரிக்க டொலர்கள் மொத்த பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

இது இலங்கை நாணயப்படி 276 கோடியே 45 இலட்சம் ரூபாவுக்கு சற்று அதிகமானதாகும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட பணப்பரிசுத் தொகையை விட இது 10 வீதம் அதிகமாகும்.

சம்பியனாகும் அணிக்கு 2,340,000 அமெரிக்க டொலர்களும் (73 கோடியே 80 இலட்சம் ரூபா) உப சம்பியனாகும அணிக்கு 1,170,000 அமெரிக்க டொலர்களும் (36 கோடியே 90 இலட்சம் ரூபா) பணப்பரிசாக கிடைக்கவுள்ளது.

10ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் 12 அணிகளுக்கும் தலா 247,500 அமெரிக்க டொலர்கள் (7 கோடியே 80 இலட்சம் ரூபா) உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச பணப்பரிசு கிடைக்கும்.

அரை இறுதிகளில் தோல்வி அடையும் இரண்டு அணிகளுக்கும் தலா 676,000 அமெரிக்க டொலர்கள் (21 கோடியே 29  இலட்சம் ரூபா) கிடைக்கும்.

இதனைவிட குழு நிலைப் போட்டிகளில் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 31,154 அமெரிக்க டொலர்கள் (98 இலட்சம் ரூபா) வழங்கப்படும்.

பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் 60 தினங்களே இருக்கின்றது.

வரவேற்பு நாடான இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் மகளிர் ரி20 உலகக் கிண்ணம் ஆரம்பமாகும். இறுதிப் போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஜூலை 5ஆம் திகதி நடைபெறும்.  

இந் நிலையில் உலகக் கிண்ணம் இங்கிலாந்தின்  லோர்ட்ஸ்  விளையாட்டரங்கில் டிபி வேர்ல்ட் அனுசரணையுடன் தனது சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளது.

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளான ஸ்கொட்லாந்து (மே 7 - 10), நெதர்லாந்து (மே 11 - 14), அயர்லாந்து (மே 15 - 18) ஆகிய நாடுகளுக்கு உலகக் கிண்ணம் கொண்டு செல்லப்படும்.

அதனைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெறும் லீட்ஸ் (மே 19 - 24), மென்செஸ்டர் (மே 25 - 27), பேர்மிங்ஹாம் (28 -29), பிறிஸ்டல் (மே 31 - ஜூன் 1)., சவுத்ஹம்ப்டன் (ஜூன் 3 - 4), லண்டன் (ஜூன் 5 - 9) ஆகிய விளையாட்டரங்குகளில் மகளிர் ரி20 உலகக் கிண்ணம் காட்சிப்படுத்தப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26
news-image

கூப்பர் கொனலியின் சதம் வீண்போனது; பஞ்சாபை...

2026-05-07 11:34:54
news-image

பரபரப்பான முடிவை நோக்கி தம்புள்ளை -...

2026-05-07 09:18:58
news-image

சம அளவில் மோதப்படும் தேசிய சுப்பர்...

2026-05-06 09:33:01
news-image

சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிக்கு சஞ்சு...

2026-05-06 09:27:53
news-image

லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026க்கான...

2026-05-05 23:06:59