கோடைகால வெப்ப நிலையால் மாரடைப்பு பாதிப்பு ஏற்படுமா..?

13 Apr, 2026 | 05:51 PM
image

கோடை காலத்தில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதும், அதற்கான சாத்தியக்கூறு அதிகரிப்பதும் உண்மை என வைத்தியர்கள் விவரித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து பேசுகையில், '' இது முக்கியமான கேள்வி. இது தொடர்பாக ஆரோக்கியமானவர்களும், ஆரோக்கிய பாதிப்பினை எதிர்கொண்டவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயமும் உள்ளது. கோடைக்கால வெப்பநிலை இதயத்தை அதன் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிப்பதில்லை.

ஆனால் கோடை காலத்தில் இதயத்தின் செயல்பாட்டில் சமச்சீரற்ற நிலையும், பாதிப்பும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். ஏனெனில் கோடை காலத்தில் எம்முடைய உடலுக்கு தேவையான நீர் சத்தில் குறைபாடு ஏற்படுவது அதிகம். இயல்பாகவே கோடை காலத்தில் மக்கள் நாளாந்த கடமையை மேற்கொள்ளும் போது அதீதமாக வியர்வை வெளியேற்றம் நடைபெறும். இதன் காரணமாக டிஹைட்ரேசன் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் நீர் சத்து குறைபாடு ஏற்படும்.

உடலின் வலிமை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால்... உடனடியாக எம்முடைய குருதியின் அடர்த்தியில் மாற்றம் ஏற்பட்டு, குருதி இயல்பான அளவைவிட தடித்து விடும். இத்தகைய நிலை இதயத்தில் ஏற்பட்டால் இதய பாதிப்பு குறிப்பாக மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகிறது. குறிப்பாக கோடை காலத்தில் இளைய தலைமுறையினர் வழக்கத்தை விட கூடுதலாக உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் மாரடைப்பு ஏற்படக்கூடும். மேலும் கோடை காலகட்டத்தில் உடற்பயிற்சியை அதிகமாக மேற்கொண்டாலும் உடலும், இதயமும் விரைவில் சோர்வை எட்டி புத்தாக்கம் பெறுவதில் தடுமாற்றமும் , தடையையும் சந்தித்து மாரடைப்பை உண்டாக்கும்.

ஏற்கனவே இதய பாதிப்பை எதிர்கொண்டு சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் பெற்றவர்களும் இத்தகைய கோடைகால வெப்ப அளவில் ஏற்படும் மாற்றம் காரணமாக மீண்டும் இதய பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். இவர்கள் இதய ஆரோக்கியத்தை பேணி பராமரிப்பதற்காக அதிகமாக நீரினை அருந்தினாலும்... அதன் காரணமாக சிறுநீர் அதிகமாக வெளியேறி, இந்த சுழற்சியின் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உண்டாகும்.‌

ஒஸ்துமா, சிறுநீரக கோளாறு போன்றவற்றால் பாதிப்படைந்து நிவாரண சிகிச்சை பெற்றவர்களும்  கோடை காலத்தில் வெப்ப அலையை எதிர்கொள்வதில் முழுமையான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

இந்நிலையில் கோடை காலத்தில் உச்ச பகல் பன்னிரண்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை வெளியில் நடமாடுவதை முற்றாக தவிர்த்திட வேண்டும். நீர் சத்து குறைபாடு ஏற்படாமல் உங்களுடைய உணவு முறையையும், நீர் அருந்தும் முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்''.என்றனர். 

வைத்தியர் குருராஜ்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்டிக் என்செலோபதி எனும் மூளை பாதிப்பிற்குரிய...

2026-05-07 16:06:06
news-image

இதய இரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான...

2026-05-06 18:44:07
news-image

தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-05-05 17:56:46
news-image

டயாலிசிஸ் செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு பலனளிக்கும்...

2026-05-02 14:00:06
news-image

மாரடைப்பு ஏற்படுமா ? என்பதை துல்லியமாக...

2026-05-01 15:42:43
news-image

கீமோதெரபி சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படுமா..?

2026-04-30 16:01:21
news-image

இலங்கையில் நால்வரில் ஒருவருக்கு இரைப்பை அழற்சி

2026-04-29 22:31:31
news-image

சர்க்கரை நோயாளிகள் கோடைகால வெப்பத்தை எதிர்கொள்வது...

2026-04-29 18:36:04
news-image

ஒன்றுக்கும் மேற்பட்ட இதய ரத்த நாள...

2026-04-27 16:03:52
news-image

மூளையில் ஏற்படும் காயங்களுக்கான நவீன சிகிச்சை

2026-04-25 13:06:07
news-image

அடிசியோலிசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-04-24 17:37:23
news-image

மேக்சிலரி சைனசிட்டிஸ் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2026-04-22 16:18:45