அவுஸ்திரேலிய தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் உலக அதிர்ச்சியை ஏற்படுத்தும் சாதனை ஒன்று பதிவாகியுள்ளது. 18 வயதான இளம் தடகள வீரர் கௌட் கௌட் (Gout Gout ) ‘20 வயதுக்குட்பட்டோர்’ (U-20) பிரிவில், உலகப் புகழ்பெற்ற உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தப் போட்டியில், கௌட் கௌட் 200 மீற்றர் தூரத்தை வெறும் 19.67 வினாடிகளில் கடந்து புதிய சாதனையைப் பதிவு செய்தார். இதற்கு முன்பு, உசைன் போல்ட் தனது இளையோர் (U-20) பிரிவில் 19.90 வினாடிகள் என்ற சாதனையைப் பதிவு செய்திருந்தார். தற்போது அந்த சாதனையை முறியடித்து கௌட் கௌட் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
போட்டிக்குப் பின்னர் கருத்து தெரிவித்த அவர்,
“இந்த தருணத்திற்காகவே நான் நீண்ட காலமாக காத்திருந்தேன். இறுதிப் போட்டிக்கு முன் என் திட்டங்களை மீண்டும் சரிபார்த்தேன். நான் 19.75 வினாடிகளில் ஓடுவேன் என்று எண்ணினேன். ஆனால் எதிர்பாராதவிதமாக 19.67 வினாடிகளில் இலக்கை அடைந்துவிட்டேன்,” என தெரிவித்தார்.
உலகின் தலைசிறந்த ஓட்ட வீரரான உசைன் போல்ட் உடன் தன்னை ஒப்பிடுவது குறித்து கேட்கப்பட்டபோது, “மக்கள் என்னை உலகின் சிறந்த வீரருடன் ஒப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நான் எனது தனிப்பட்ட பாதையில் செல்ல விரும்புகிறேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. நான் ஓட்டப்பந்தய மைதானத்திற்குள் சென்றுவிட்டால், அங்கே நானும், ஓடுதளமும், எனது காலணிகளும் மட்டுமே இருக்கும்,” என அவர் பதிலளித்தார்.
இந்த சாதனை, உலக தடகள வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், எதிர்காலத்தில் புதிய நட்சத்திரம் உருவாகி வருவதாகவும் பார்க்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM