கொழும்பு 10 இல் அமைந்துள்ள Oberon கட்டிடத்தில், சமூக மருத்துவ நிபுணர் Dr Irshad Mashood தலைமையில், NCD (Non-Communicable Diseases) தடுப்பு தொடர்பான Journal Club நிகழ்வும், Ramadan Health Challenge போட்டி வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வை MIRT (பன்முகத் துறை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) ஏற்பாடு செய்திருந்தது. ஆராய்ச்சி பண்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் சமூக அடிப்படையிலான சுகாதார முயற்சிகளை மேற்கொண்டவர்களை பாராட்டி கௌரவிப்பதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.
நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
முதலாவது அமர்வில், Dr Irshad Mashood அவர்கள் தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து, NCD தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தையும் அதன் சமூக முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து, ஆய்வுக் கட்டுரை குறித்த விமர்சனங்களை வைத்தியர் மிசாயா காதர் (தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், சுகாதார அமைச்சு), டாக்டர் ஸாகி ஹனீஃபா மற்றும் வைத்தியர் எம். ஜி. எம். மாஃபாஸ் ஆகியோர் வழங்கினர்."
நிகழ்வின் பிரதான உரையை “சமூக சந்தைப்படுத்தல் மற்றும் சமூக இயக்கம்” என்ற தலைப்பில், இளம் தொழிலதிபரும் தொழில் வழிகாட்டல் ஆலோசகரும் சமூக செயற்பாட்டாளருமான Ihsan Wahid வழங்கினார்.
இதனுடன் இணைந்து நடத்தப்பட்ட “Ramadan Health Challenge” என்ற சமூக அடிப்படையிலான சுகாதார சவால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முறையே 100,000 ரூபா ,50,000 ரூபா மற்றும் 30,000 ரூபா பெறுமதியுள்ள பணப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மொத்தம் 400 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில், நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.
இவர்களில் காத்தான்குடி, வரக்காப்பொல, ராஜகிரிய மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றனர்.
MIRT நிறுவனம், விரிவான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி முன்னெடுப்புகள் மூலம் சமூகத்தின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய மையமாக உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM