( இணையத்தள செய்திப் பிரிவு )
மதுரட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானகொல பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட தகராறில் மரப்பலகை ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மானகொல, ஏலமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பகையே இந்த கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரப்பலகை ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நபர் ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையுடன் தொடர்புடைய ஏலமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மதுரட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM