ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர் ருவெண் ஜேவியர் அஸாரின் முக்கிய கருத்து!

15 Apr, 2026 | 09:13 AM
image

ஆர்.ராம்

இலங்கையில் உள்ள ஈரானிய கடற்படையினரை அவர்களது தாயகத்துக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அவர்கள் நாடு திரும்பியதன் பின்னர் அமெரிக்காவுக்கோ, எமக்கோ எதிரான போர்களில் ஈடுபடாதவாறான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கையின் தீர்மானத்தில் திருப்தி அடைவோம் என்று இஸ்ரேலிய தூதுவர் ருவெண் ஜேவியர் அஸார் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது, ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா மூழ்கடிக்கப்பட்டதன் பின்னர் அதிலிருந்து காப்பாற்றப்பட்ட 32பேரும், அவசர அடைக்கலம் கோரிய ஐ.ஆர்.ஐ.எஸ் புஷேர் கப்பலிருந்து காப்பாற்றப்பட்ட 208பேரும் இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான கோரிக்கை இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இஸ்ரேலின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்ள ஈரானிய கடற்படையினரை அவர்களது தாயகத்துக்கு அனுப்புவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும். எம்மைப்பொறுத்தவரையில் குறித்த கடற்படை வீரர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது அவர்களோ அவர்களின் கப்பல்கள் எமக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ எதிரான போர்களில் ஈடுபடாதவாறு  இருக்க வேண்டும். அவ்வாறான செயலிழப்பு செயற்பாட்டை உறுதிப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தில் திருப்தி அடைவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47