(நெவில் அன்தனி)
துடுப்பாட்ட வீரர்களுக்கு சொர்க்கபுரியாக அமைந்த மும்பை வான்கடே விளையாட்டரங்க ஆடுகளத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
ஃபில் சோல்ட், விராத் கோஹ்லி, அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் புவ்ணேஷ்வர் குமார், க்ருணல் பாண்டியா ஆகியோரின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெற்றிபெறச் செய்தன.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 240 ஓட்டங்ளைக் குவித்தது.
பில் சோல்ட், விராத் கோஹ்லி. அணித் தலைவர் ரஜாத் பட்டிதார், டிம் டேவிட் ஆகிய முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் மும்பை பந்துவீச்சாளர்களை நையப்புடைத்து ஓட்டங்களைக் குவித்தனர்.
ஃபில் சோல்ட், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 65 பந்துகளில் 120 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஃபில் சோல்ட் 36 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைக் குவித்தார்.
தொடர்ந்து ரஜாத் பட்டிதாருடன் 2ஆவது விக்கெட்டில் 23 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்த விராத் கோஹ்லி 38 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றார்.
மொத்த எண்ணிக்கை 194 ஓட்டங்களாக இருந்தபோது ரஜாத் பட்டிதார் ஆட்டம் இழந்தார்.
அவர் 20 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைக் குவித்தார்.
டிம் டேவிட் 16 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
மும்பை இண்டியன்ஸும் துடுப்பாட்டத்தில் சளைக்கவில்லை.
மொத்த எண்ணிக்கை 57 ஓட்டங்களாக இருந்தபோது ரோஹித் ஷர்மா (19) உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற்றதால் மும்பை இண்டியன்ஸ் நெருக்கடிக்கு உள்ளானது.
போதாக்குறைக்கு ரெயான் ரிக்ல்டன் (37), திலக் வர்மா (1) ஆகிய இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (74 - 2 விக்.)
தொடர்ந்து சூரியகுமார் யாதவ், அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் அணியை மீட்டெடுக்க கடுமையாக முயற்சித்தனர்.
சூரியகுமார் யாதவ் 33 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது அவரை ஹார்திக்கின் சகோதரர் க்ருணல் பாண்டியா ஆட்டம் இழக்கச் செய்து இணைப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.
இதனை அடுத்து மும்பை இண்டியன்ஸின் வெற்றிக்கு ஓவருக்கு 16 ஓட்டங்களுக்கு மேல் தேவைப்பட்டது.
ஹார்திக் பாண்டியாவும் ஷேர்ஃபேன் ரதர்ஃபர்டும் ஆடுகளத்தில் இருந்ததால் மும்பை இண்டியன்ஸுக்கு சிறு நம்பிக்கை ஏற்பட்டது,
ஹார்திக் பாண்டியா 40 ஓட்டங்களுடனும் நாமன் திர் ஒரு ஓட்டத்துடனும் 6 பந்துகளுக்கு இடையில் ஆட்டம் இழக்க மும்பை இண்டியன்ஸ் நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், ஷேர்ஃபேன் ரதஃபர்ட் 18ஆவது ஓவரில் 3 சிக்ஸ்களை விளாசியதுடன் 3 வைட்களும் கிடைக்க அந்த ஓவரில் 21 ஓட்டங்கள் குவிந்தன.
புவ்ணேஷ்வர் குமார் 19ஆவது ஓவரை கட்டுப்பாட்டுடன் வீசி 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து றோயல் செலஞர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
கடைசி ஓவரில் மும்பை இண்டியன்ஸின் வெற்றிக்கு 45 ஓட்டங்கள் தெவைப்பட்டது.
அந்த ஓவரில் ரதஃபர்ட் 4 சிக்ஸ்களை விளாசியபோதிலும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெறுவதை அவரால் தடுக்க முடியாமல் போனது.
ஷேர்ஃபேன் ரதஃபர்ட் 31 பந்துகளில் ஒரு பவுண்டறி, 9 சிக்ஸ்கள் உட்பட 71 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் சுயாஷ் ஷர்மா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM