லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை சகலதுறைகளிலும் விஞ்சிய குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது

Published By: Vishnu

12 Apr, 2026 | 09:56 PM
image

(நெவில் அன்தனி)

லக்னோவ் எக்கனா கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற பகல் இரவு ஐபிஎல் போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை விட சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

ப்ராசித் கிரிஷ்ணாவின் 4 விக்கெட் குவியல், அணித் தலைவர் ஷுப்மான் கில், ஜொஸ் பட்லர் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன குஜராத் டைட்டன்ஸை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 165 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 18.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

மொத்த எண்ணிக்கை 45 ஓட்டங்களாக இருந்தபோது சாய் சுதர்சன் (15) ஆட்டம் இழந்தார்.

இந் நிலையில் ஷுப்மான் கில், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

ஷுப்மன் கில் 40 பந்துகளில் 50 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 37 பந்துகளில் 60 ஓட்டங்களையும் பெற்று அணியைப் பலப்படுத்தினர். ஆனால், இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

இதனைத் தொடர்ந்து வொஷிங்டன் சுந்தர் (21 ஆ.இ.), ராஹுல் தேவாட்டியா (10 ஆ.இ.) வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் 8 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்களில் ஒருவரைத் தவிர வேறு எவரும் 20 ஓட்டங்களைக் கடக்கவில்லை.

ஆரம்ப வீரர் ஏய்டன் மார்க்ராம் மாத்திரமே ஒரளவு திறமையை வெளிப்படுத்தி 30 ஓட்டங்களைப் பெற்றார்.

நிக்கலஸ் பூரன் 19 ஓட்டங்களையும் அணித் தலைவர் ரிஷாப் பான்ட், அப்துல் சமாத், முகுல் சௌதரி ஆகிய மூவரும் தலா 18 ஓட்டங்களையும் ஜோர்ஜ் லிண்டே 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ராசித் கிரிஷ்ணா 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அஷோக் ஷர்மா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ப்ராசித் கிரிஷ்ணா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற...

2026-05-11 19:41:05
news-image

முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றி முதல்...

2026-05-11 10:22:37
news-image

உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அரைச்...

2026-05-11 10:09:02
news-image

மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில்...

2026-05-10 14:12:03
news-image

ஷுப்மான் கில், சாய் சுதர்சன் துடுப்பாட்டத்திலும்...

2026-05-10 12:20:12
news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26