20இன் கீழ் பெண்களுக்கான 10 கி.மீ.  உலக மெய்வல்லுநர்  வேகநடைப் போட்டியில் யெங் தங்கப் பதக்கம் வென்றார்

Published By: Vishnu

12 Apr, 2026 | 08:00 PM
image

(நெவில் அன்தனி)

பிறேஸில் தேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) காலை நடைபெற்ற கெக்சியா வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) வேகநடை அணிநிலை சம்பியன்ஷிப் பிரசிலியா '26 போட்டியில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10 கிலோ மீற்றர் வேகநடைப் போட்டியில் சீன வீராங்கனை யெங் யுட்டொங் தனிநபர் மற்றம் அணி நிலை ஆகிய இரண்டு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தார்.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் இத்தாலியின் 18 வயதுக்குட்பட்ட ஐரோப்பிய சம்பியன் செரினா டி ஃபேபியோவின் சவாலை முறியடித்து 19 வயதான யெங் யுட்டொங் வெற்றிபெற்றார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10 கிலோ மீற்றர் வேக நடைப் போட்டியை 46 நிமிடங்கள், 11 செக்கன்களில் நிறைவு செய்த யெங் யுட்டொங் 10 செக்கன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். செரினா டி ஃபேபியோ 46 நிமிடங்கள், 21 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இப் போட்டியில் மற்றொரு சீன வீராங்கனை ரி லிஹுஆ (46:37) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

போட்டியின் முதலாவது கிலோ மீற்றர் 5 நிமிடங்கள், 09 செக்கன்களில் நிறைவுசெய்யப்பட்டது.

போட்டி 3ஆவது கிலோ மீற்றரை தொட்ட போது போட்டியாளர்களின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து போட்டி 5ஆவது கிலோ மீற்றரை 24 நிமிடங்கள், 01 செக்கனில் தொட்டபோது ஒரே குழுவாக சென்றவர்கள் சிறுக சிறுக பிரியத் தொடங்கி 6ஆவது கிலோ மீற்றரைக் கடந்தபோது ஐவருக்கு இடையில் போட்டி நிலவ தொடங்கியது.

செரினா டி ஃபேபியோ. பிரான்ஸ் வீராங்கனை க்ளோ லே ரோச், சீன வீராங்கனைகளான யெங் யுட்டொங், நி லிஹுஆ, வெங் யாரு ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.

இதனை அடுத்து 8ஆவது கிலோ மீற்றர் நெருங்குகையில் லே ரோச், வெங் யாரு ஆகிய இருவரும் முன்னிலை அடைந்தனர். டி ஃபேபியோ, யெங், நி ஆகிய மூவரும் ஒன்றாக நடந்துகொண்டிருந்தனர்.

ஆனால், அதன் பின்னர் கடும் போட்டி நிலவ ஆரம்பித்தது.

கடைசிக் கட்டத்தில் தனது வேகத்தை அதிகரித்த யெங் யுட்டொங் போட்டியை 46:11 செக்கன்களில் நிறைவு செய்து இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற மூன்றாவது தொடர்ச்சியான சீன வீராங்கனை ஆனார்.

செரினா டி ஃபேபியோ (46:21) இரண்டாம் இடத்தையும் நி லிஹுஆ (46:37) மூன்றாம் இடத்தையும் க்ளோ லே ரோச் (47:18) நான்காம் இடத்தையும் வெங் யாரு (47:27) ஐந்தாம் இடத்தையும் பெற்றனர்.

இதேவேளை, யெங் யுட்டொங், நி லிஹுஆ, வெங் யாரு ஆகிய மூவரும் இணைந்து அணி நிலை போட்டியில் சீனாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தனர். இத்தாலி வெள்ளிப் பதக்கத்தையும் ஜப்பான் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற...

2026-05-11 19:41:05
news-image

முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றி முதல்...

2026-05-11 10:22:37
news-image

உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அரைச்...

2026-05-11 10:09:02
news-image

மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில்...

2026-05-10 14:12:03
news-image

ஷுப்மான் கில், சாய் சுதர்சன் துடுப்பாட்டத்திலும்...

2026-05-10 12:20:12
news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26