இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி: "ஒரே அமர்வில் தீர்வு காண்பது கடினம்" - ஈரான் விளக்கம்

Published By: Digital Desk 3

12 Apr, 2026 | 04:40 PM
image

(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற மாரத்தான் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நிறைவடைந்தன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சு இவ்வளவு பெரிய மோதலுக்கு ஒரே அமர்வில் தீர்வு கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஈரானிய வெளிவிவகார அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் எஸ்மாயில் பாகே அரசுத் தொலைக்காட்சியிடம்,

இரண்டு அல்லது மூன்று முக்கியமான விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பெரிய இடைவெளி நிலவுகிறது. அதன் காரணமாகவே உடன்பாடு எட்டப்படவில்லை.

சில குறிப்பிட்ட விடயங்களில் அமெரிக்க மற்றும் ஈரானிய தூதுக்குழுவினர் ஒருமித்த புரிதலை எட்டியுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அணு ஆயுதங்கள் குறித்த விவாதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நட்பு நாடுகளுடனான தொடர்புகள் தொடரும் எனத் தெரிவித்த பாகே, அமைதி முயற்சிகள் முற்றுப்பெறவில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்

பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய பாகிஸ்தான் வெளிவிவகாரஅமைச்சர் இஷாக் தார் விடுத்துள்ள அறிக்கையில்,

"இரு தரப்பினரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் அவசியமானது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை எளிதாக்கும் தனது பங்கை பாகிஸ்தான் தொடர்ந்து முன்னெடுக்கும்."

இந்தத் தோல்வி குறித்து மேற்கத்திய நாடுகள் தங்களின் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளன:

"இராஜதந்திரத்தைப் பொறுத்தவரை வெற்றி கிடைக்கும் வரை நீங்கள் தோல்வியடைந்து கொண்டே இருப்பீர்கள். எனவே இந்தத் தோல்வியானது முயற்சிகளைக் கைவிடுவதற்கான காரணம் அல்ல," என பிரித்தானிய அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்தத்தைத் தொடர்வதே இப்போதைய முன்னுரிமை என்றும், மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறும் இரு நாடுகளையும் அவுஸ்திரேலிய வெளிவிவகார  அமைச்சர் பென்னி வோங்  வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்தம் தற்போது அமுலில் உள்ள நிலையில், அதனைத் தக்கவைத்துக் கொள்வதே சர்வதேச சமூகத்தின் பெரும் சவாலாக மாறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11
news-image

17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்...

2026-05-11 11:13:00
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பொலிஸ்...

2026-05-10 14:50:25
news-image

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது -...

2026-05-10 13:09:10