பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்..!

Published By: Digital Desk 3

12 Apr, 2026 | 08:46 PM
image

பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப் 12) மும்பையில் தனது 92 வயதில் காலமானார்.

ஆஷா போஸ்லேவுக்கு சனிக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தென் மும்பையில் உள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சுவாச பிரச்சினை இருந்ததால், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றையதினம் அவர் உயிரிழந்தார்.

ஆஷா போஸ்லே, 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். குறிப்பாக, இந்தியில் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடி உள்ளார்.

தமிழில் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘செண்பகமே, செண்பகமே...’, ‘ஹேராம்’ படத்தில் இடம்பெற்ற ‘நீ பார்த்த பார்வை...’,  ‘அலை பாயுதே’ படத்தில் இடம்பெற்ற ‘செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்...’ உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இந்திய அரசின் பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள இவர், மறைந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை ஆவார். ஆஷா போஸ்லே மறைவு திரையுலகினரையும், இரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

29 - திரைப்பட விமர்சனம்

2026-05-11 16:47:59
news-image

ஜூன் மாதத்தில் வெளியாகும் புதுமுகங்கள் நடித்திருக்கும்...

2026-05-11 16:27:20
news-image

நடிகர் சூர்யாவின் 'கருப்பு' படத்தின் முன்னோட்டம்...

2026-05-11 16:26:17
news-image

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் 'வாரண்ட்'...

2026-05-11 16:17:16
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-11 15:15:36
news-image

ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தீப் கிஷன்...

2026-05-11 15:14:08
news-image

ஓகஸ்டில் ரசிகர்களை 'ஐ அம் கேம்...

2026-05-11 15:04:47
news-image

காதலும், இன்னிசையும் கலந்து தயாராகும் 'சைக்கிள்...

2026-05-11 14:58:11
news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52