கொழும்பில் இருந்து கொண்டே நோர்வே நாட்டு தொழில்நுட்ப நிறுவனமொன்றைக் கட்டியெழுப்பிய மனோ சேகரத்தின் சாதனைப் பயணம்
99x நிறுவனத்தின் ஸ்தாபகர் தனது இரு தசாப்த கால விடாமுயற்சியின் பலனாக, இலங்கையின் பொறியியல் நிறுவனமொன்றை நோர்வேயில் தலைமையகத்தைக் கொண்ட, ஏழு நாடுகளில் இயங்கும் மாபெரும் நிறுவனமாகக் கட்டியெழுப்பியுள்ளது மாத்திரமன்றி, இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுப்பாலமாகவும் மாறியுள்ளார்.
Saint Clair Market Intelligence | March 2026
இலங்கையின் தொழில்நுட்பத்துறையில் முன்மாதிரியாக விளங்குபவர்களின் சாதனைப்பயணம் தொடர்பான சிறப்புத் தொடரின் முதலாவது தொடராக இது அமைந்துள்ளது. ஒவ்வொரு தொடரும், ஸ்தாபகர் ஒருவர் அல்லது அணி ஒன்று எத்தனையோ தசாப்த காலமாக விடாமுயற்சியுடன் உழைத்து, பாரிய கட்டமைப்பையும், நிறுவனங்களையும் கட்டியெழுப்பி, அடுத்த தலைமுறை நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் இன்று சார்ந்து நிற்கின்ற அளவுக்கு வளர்ச்சி காண்பதற்காக ஈட்டியுள்ள சாதனைகளின் சான்றுகளை எமக்கு நிரூபிக்கின்றன.
மனோ சேகரம் அவர்கள் 2000ம் ஆண்டில் கொழும்பில் மென்பொருள் நிறுவனமொன்றை ஸ்தாபித்தார். இன்று 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்நிறுவனத்தின் தலைமையகம் ஒஸ்லோ மாநகரில் உள்ளதுடன், ஏழு நாடுகள் மத்தியில் 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக்களையும் வழங்கியுள்ளது. பிரேசில் முதல் நோர்வே வரை பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் மூலகாரணமான மனோ சேகரம் அவர்கள் தற்போது இலங்கைக்கான நோர்வே நாட்டின் கௌரவ தூதுவராக சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறிதாக இயங்க ஆரம்பித்த இலங்கையின் பொறியியல் நிறுவனமொன்று நோர்வேயைத் தளமாகக் கொண்ட தொழில்நுட்ப குழுமமாக வளர்ச்சி கண்டுள்ள வரலாறு கட்டாயமாக அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு மகத்தான பயணமாகும். இந்நிறுவனம் தனிப்பட்ட முறையில் மகத்தான பயணத்தை முன்னெடுத்துள்ளது என்பது மாத்திரமன்றி, அதைத் தோற்றுவித்த சூழல் எமக்கு வெளிப்படுத்தும் ஆழமான விடயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டியது முக்கியமாகும்.
கண்டியிலிருந்து கொழும்புக்கு
கண்டியில் தனது இளம் பிராயத்தைக் கழித்த மனோ சேகரம் அவர்கள், இலங்கையில் மென்பொருள் என்ற ஒரு துறை பெரிதாக அறியப்பட்டிராத ஒரு காலகட்டத்தில் இத்துறையில் கால்பதித்தார். அவர் ஆரம்பத்திலேயே தனது தொழில் முயற்சிக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டினார். அதன் பின்னர் 2008ம் ஆண்டில் அதனை தனது முதலீட்டாளரிடமிருந்து ஐந்து மடங்கு மதிப்பில் சொந்தமாக வாங்கிக்கொண்டார். இது அக்காலகட்டத்தில் ஒரு முன்மாதிரியாக மாறியதுடன், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. எவ்வளவை வைத்திருக்கின்றோம் என்பதை விட எவ்வளவை எமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றோம் என்பதற்கு மனோ சேகரம் அவர்கள் தொடர்ச்சியாக முன்னுரிமை அளித்தார்.
அவர் கட்டியெழுப்பிய 99x நிறுவனம், திட்டமிட்டு ஒரு சிறு நிறுவனமாகவே பேணப்பட்டது. அக்காலத்தில் இத்துறையில் அவருடன் போட்டியிட்ட ஏனைய நிறுவனங்கள் அளவுகளை நோக்கிக் கவனம் செலுத்திய சமயத்தில், இலாப மட்டம் என்பதிலேயே மனோ சேகரம் அவர்கள் கவனம் செலுத்தினார். மூன்று ஆண்டுகளாக கிட்டத்தட்ட எவ்விதமான சிறு தவறு கூட அல்லாத தொழிற்பாடு, திட்டமிட்ட கால அட்டவணையில் சேவைகளை வழங்குவதில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான மாறுபாடு, பணியை மீண்டும் செய்யவேண்டிய தேவைகளை குறைந்தபட்சமாக்குவதில் கவனம் செலுத்தியமை போன்ற மகத்தான செயல்பாட்டுப் பண்புகளை நிறுவனம் நிரூபித்து, தனது தரத்தை நிலைநாட்டியமையால், இந்திய சேவை வழங்குனர்களுடன் ஒப்பிடுகையில் தனது பொறியியலாளர்கள் இரு மடங்கை விடவும் அதிகமாக அமையும் வண்ணம் விற்பனையை பன்மடங்காக்கினர் என மனோ சேகரம் அவர்கள் குறிப்பிட்டார். “நீங்கள் அவர்களை விடவும் இரு மடங்கு சிறந்த சேவையை வழங்குபவராக இருந்தாலேயொழிய உங்களிடமிருந்து எதையும் வாங்க முன்வரமாட்டார்கள்” என்றார். நோர்வேயிலுள்ள சுயாதீன மொன்பொருள் விற்பனையாளர்களுக்கு கிட்டத்தட்ட தமது சேவைகளை பிரத்தியேகமாக வழங்கும் வாய்ப்பை அதன் மூலமாகக் கைப்பற்றிக்கொண்டதாக மனோ சேகரம் அவர்கள் கூறினார்.
2020ம் ஆண்டில் சுமார் 350 பொறியியலாளர்களைக் கொண்ட நிறுவனமாக 99ஒ வளர்ச்சி கண்டதுடன், 106 மில்லியன் நோர்வே குரோனர் வருமானத்தை ஈட்டியது. அத்துடன் அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 30மூ வளர்ச்சியையும் இந்நிறுவனம் பதிவு செய்தது. இந்த அளவீடு இலங்கையின் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் மிகச் சிறந்த வெற்றிப்பயணத்தை எடுத்துக்காட்டியது. எனினும் கட்டமைப்புரீதியாக அது இன்னமும் இலங்கையின் சேவைகள் ஏற்றுமதி நிறுவனமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மையமாக நோர்வே மாறியமை
2021ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றங்கண்டது. ழேசவாணழநெ ஸ்தாபகர் கார்ல் கிறிஸ்டியன் அஜெரப் மற்றும் நோர்வே நாட்டு முதலீட்டு நிறுவனமான றுயவசரைஅ உள்ளிட்ட நோர்வே நாட்டின் செல்வந்த நபர்களின் கூட்டுப்பலத்துடன் ர்நசமரடநள னுநயட-டில-னுநயட என்ற வட ஐரோப்பிய தனியார் பங்கு நிறுவனம் 60 சதவீத பங்குகளாக 20 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை முதலீடு செய்தது.
இந்த மூலதனத்தை வளர்ச்சிக்கான நிதி என்று கூறி விடுவதுடன் நின்று விட முடியாது. அது கட்டமைப்பின் வளர்ச்சிக்கான ஒரு நெம்புகோலாக அமைந்தது. இலங்கையின் ஏற்றுமதி நிறுவனமாக இயங்கி வந்த 99ஒ நிறுவனத்தை நோர்வேயைத் தலைமையகமாகக் கொண்ட குழுமமாக மீள்கட்டமைப்புச் செய்வதற்குத் தேவையான மூலதனத்தை திரட்டி, நோர்வேயில் தாய் நிறுவனமாக அதனை ஸ்தாபிப்பதற்கு இந்த முதலீடு உதவியது. இரு வருடங்களுக்குள் அதன் மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 75 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஏனைய நிறுவனங்களைக் கையகப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நோர்வேயில் உள்ள ளுநநனள ஊழளெரடவiபெ (2021), பிரேசிலில் உள்ள நேஒவடல மற்றும் டுநயnழுn (2023)இ நோர்வேயில் உள்ள ஊடயஎந ஊழளெரடவiபெ (2024) மற்றும் 2025ம் ஆண்டில் சுவீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் மேலும் ஐந்து கையகப்படுத்தல்கள் என பல நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த கையகப்படுத்தல் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் குழுமத்தின் சேவை வழங்கல் ஆற்றல்கள் மற்றும் பூகோளரீதியான வீச்சு ஆகியவற்றை மேம்படுத்த வழிவகுத்தன. ஒன்றுதிரட்டப்பட்ட நிறுவனத்தை வழிநடத்துவதற்காக Pநஒipஇ ஆஉமுiளெநலஇ மற்றும் ஆiஉசழளழகவ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்ட ஆட் ஸ்வெர்ரே ஆஸ்ட்லி அவர்கள் நோர்வே குழும தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
2024 ஜனவரியில் தலைமை நிர்வாக அதிகாரி என்ற தனது பதவியைத் துறந்த மனோ சேகரம் அவர்கள், ஸ்தாபகர் மற்றும் நிறைவேற்றுத் தலைவராக தன்னை மாற்றிக் கொண்டார். தொடர்ந்தும் அவர் மிகப் பெரிய தனிநபர் பங்குதாரராகத் திகழ்ந்து வருவதுடன், குழுமத்தின் கூட்டிணைவு மற்றும் கையகப்படுத்தல் முயற்சிகளை சிறப்பாக முன்னெடுத்து வருவது மாத்திரமன்றி, குழுமத்தின் பணிப்பாளர் சபையிலும் இடம்பெற்றுள்ளார். 99ஒ நிறுவனத்தின் பொறிறியல் பிரிவு தற்போது தலைமை நிர்வாக அதிகாரியான ஹசித் யக்கஹவிட்ட அவர்களால் வழிநடத்தப்பட்டு வருவதுடன், இலங்கையைத் தளமாகக் கொண்டுள்ளது.
இராஜதந்திர உறவுப் பாலம்
வழக்கமாக நிறுவனமொன்றின் ஸ்தாபகர் ஒருவர் அந்தப் பதவியைத் துறக்கும் வழிமுறையைப் பின்பற்றாது, நிறுவனரீதியான கட்டமைப்பினை முற்றிலும் மாற்றியமைத்தமை மனோ சேகரம் அவர்களின் பயணத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாகவுள்ளது. 2023ம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பிலுள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு நோர்வே தீர்மானித்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டு செப்டெம்பரில் இலங்கைக்கான கௌரவ தூதுவராக நோர்வே அரசாங்கம் மனோ சேகரம் அவர்களை நியமனம் செய்தது. வர்த்தகரீதியான தனது அத்திவாரங்களைக் கட்டியெழுப்புவதற்கு இரு தசாப்தங்களாக உழைத்த தனிநபர் ஒருவரிடம் இருதரப்பு உறவுகளைக் கவனிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது.
இது வெறுமனே சம்பிரதாயபூர்வமான ஒரு நியமனம் கிடையாது. இலங்கை மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு இடையில் இரு தசாப்த காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட உறவுப்பாலத்தின் பலனே அவருடைய நியமனம். மனோ சேகரம் அவர்கள் ஏற்கனவே ளுடுயுளுளுஊழுஆ என்ற தகவல் தொழில்நுட்பத் துறையின் உச்ச அதிகார அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளார். இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப விரைவுபடுத்தல் நிறுவனமான ளுவயசவரி ஓ குழரனெசல என்பதை கூட்டாக ஸ்தாபித்தார். தனியார் முதலீட்டாளர்களையும், தொடக்க வணிக முயற்சிகளையும் தொடர்புபடுத்துகின்ற டுயமெய யுபெநட நேவறழசம அமைப்பிற்கும் அவர் தலைமைப்பொறுப்பை வகித்துள்ளார். இத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்புக்கள் காரணமாக 2014ம் ஆண்டில் டீசவைiளா ஊழஅpரவநச ளுழஉநைவல அமைப்பிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதை அவர் சம்பாதித்தார்.
அவர் பின்பற்றும் முறை என்றும் மாறாதது: நிறுவமொன்றைத் தோற்றுவித்தல், அதன் வழித்தடத்தை உருவாக்குதல், அத்துறையைக் கட்டியெழுப்புதல். ஒவ்வொரு படியிலும் ஏனையவை வலுப்பெறுகின்றன.
அவருடைய சாதனைப் பயணம் எமக்கு எதனை உணர்த்துகின்றது
கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிய 99ஒ என்ற பொறியியல் நிறுவனத்தை நோர்வே தொழில்நுட்பக் குழுமமாக வளர்ச்சி பெறச் செய்தமை தனிநபர் ஒருவரின் வெற்றியாக அல்லாமல், கட்டமைப்புரீதியான ஒரு வெற்றியை நமக்கு உணர்த்துகின்றது.
நோர்வே தனியார் பங்கு நிறுவன மூலதனம், ஐரோப்பிய தீர்மானக் கட்டமைப்பு, கையகப்படுத்தல் முயற்சிகளை முன்னிலைப்படுத்திய விரிவாக்க முயற்சி என மனோ சேகரம் அவர்கள் கைக்கொண்ட வழிமுறைகள் சர்வசாதாரணமானவை. தொழில்நுட்ப சேவைகள் நிறுவனமொன்றினை சர்வதேசமயப்படுத்துவதற்கான வழக்கமான உத்தியாகும். எனினும் இலங்கை ஸ்தாபகர் ஒருவர் இலங்கையிலிருந்து கொண்டே இந்த உத்தியை மிகச் சரியாக முன்னெடுத்து, அதன் பிரதிபலனை தனது கட்டுப்பாட்டின் கீழ் பேணி, வணிக மையத்தை நோர்வேக்கு இடம்மாற்றிய அதேசமயம், பொறியியல் பிரிவை இலங்கையிலேயே நிலைநிறுத்தியமை மிகவும் குறிப்பிடப்படும்படியான ஒரு சாதனையாகும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை 99ஒ நிறுவனத்தின் சாதனைப் பயணம் இலங்கையின் தொழில்நுட்பத் துறையை வெளிச்சேவைகளை ஒப்படைக்கும் ஒரு துறையாக கருதும் கண்ணோட்டத்தைச் சிக்கலாக்குகின்றது. நோர்வே வாடிக்கையாளர்களுக்கான தீர்வுகளை வழங்கி, நோர்வே நிறுவனங்களைக் கையகப்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள ஒரு நிறுவனமாக இது திகழ்கின்றது. திறமைசாலிகளைக் கொண்ட ஆளணி, பொறியியல் கலாச்சாரம், நோர்வே உள்ளிட்ட வட ஐரோப்பிய சந்தைகளுடன் இரு தசாப்தங்களாகப் பேணி வருகின்ற உறவு ஆகியன வளர்ச்சியடைந்து வருகின்ற சந்தைகளிலுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களால் ஒரு போதும் அடைய முடியாத கட்டமைப்புரீதியான மாற்றத்தை நிலைநாட்டுவதற்குச் சாதகமான சூழல்களைத் தோற்றுவித்துள்ளன.
இந்த சாதனைப் பயணத்தை மீண்டும் உருவாக்க முடியுமா, இந்த இமாலய சாதனையை நிலைநாட்டும் ஆற்றல் கொண்ட மேலும் பல ஸ்தாபகர்களை இத்துறை தோற்றுவிக்குமா என்பதே நம்மத்தியில் எழுகின்ற முக்கியமான கேள்வி. அதற்கான சூழல் கனிந்து வருவதை ஆரம்ப அறிகுறிகள் காண்பிக்கின்றன. ஆனால் அது மற்றுமொரு சமயத்தில் ஆராயப்பட வேண்டிய சாதனைப் பயணமாக அமையட்டும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM