புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

12 Apr, 2026 | 11:42 AM
image

புத்தளத்தில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் புத்தளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 84 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் தராசு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம் பகுதியில் அண்மைக்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிகளவிலான ஹெரோயின் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மொனராகலை மாவட்ட விஷப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23