இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்ஹான்பூர் மாவட்டம் போர்சர் கிராமத்தில், தரக்குறைவான வார்த்தைகளை பேசினால் ரூ.500 அபராதம் அல்லது ஒரு மணி நேரம் கட்டாய துப்புரவுப் பணி என்ற விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
‘வசைமொழி இல்லா கிராமத்தை’ நிறுவும் இந்த முடிவு கிராம பஞ்சாயத்தால் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறை தொடர்பான அறிவிப்பு பேனர் கிராமம் முழுவதும் கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம துணைத் தலைவர் வினோத் ஷிண்டே, “குழந்தைகள், பெரியவர்கள் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் பரவலாக இழிவான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பொது நடத்தையை ஒழுங்குபடுத்தவும், தரக்குறைவான வார்த்தை பயன்பாட்டால் ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM