(இணையத்தள செய்திப் பிரிவு )
மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது, நிலக்கரி தட்டுப்பாடு அல்லது தரம் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின் நுகர்வோரிடமிருந்து அறவிடாமலிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகம் ஆகியவற்றிற்காகச் செலவிடப்படும் நியாயமான செலவுகள் மட்டுமே கட்டணத் திருத்தங்களின் போது கருத்தில் கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போதும், நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்பட்ட மேலதிக செலவுகள் அல்லது ஏனைய நியாயமற்ற செலவுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல், எதிர்கால கட்டணத் திருத்த முன்மொழிவுகளின் போதும் நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஏற்படக்கூடிய மேலதிக செலவுகள் அல்லது எவ்விதமான நியாயமற்ற செலவுகளையும் மின்சாரக் கட்டணத்தில் உள்ளடக்காதிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM