புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேகநபர் கைது!

Published By: Digital Desk 1

12 Apr, 2026 | 10:44 AM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

கடந்த 08ஆம் திகதி நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, அந்த பஸ் நிலையத்தின் நலன்புரிப் பிரிவினரால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் திருடப்பட்ட சில சொத்துக்களுடன் நேற்று சனிக்கிழமை (11) களனி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களனி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் இலங்கை விமானப்படை மூலம் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17