(இணையத்தள செய்திப் பிரிவு)
பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் சிறுவர்கள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றோரின் கவனக்குறைவு காரணமாகவே சிறுவர்களுக்கு அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அத்தகைய விபத்துக்களைத் தவிர்க்க பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புத்தாண்டு காலத்தில் சிறுவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுக்கள் குறித்து தெளிவுபடுத்துமாறும், அவர்களை அந்த விளையாட்டுக்களில் ஈடுபடுத்துமாறும் வைத்தியர் கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்யாவிட்டால் சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்குள் முடங்கிப் போய்விடுவார்கள்.
அத்துடன், பலாகாரங்கள், பாற்சோறு போன்ற பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பழங்களை சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவது மிகவும் முக்கியமானது.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குழந்தைகளின் மீதான கவனம் குறைவதைக் காண்கிறோம். சிறுவர்கள் விளையாட வேண்டும், ஆனால் பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளைக் கையாளும் போது விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் பல சிறுவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். இந்த வருடம் இதனைத் தவிர்த்துக்கொள்வோம்.
தந்தைமார் மது அருந்திவிட்டு சிறுவர்களுடன் வாகனங்களில் பயணிப்பதன் மூலம் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அத்துடன், சுற்றுலா செல்லும் இடங்களிலும் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM