தெமட்டகொடை சமிந்தவை படுகொலை செய்ய சதி? ; மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தீவிர விசாரணை!

12 Apr, 2026 | 09:59 AM
image

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமிந்த ரவி ஜயநாத் எனப்படும் 'தெமட்டகொடை சமிந்தவை' கொலை செய்யும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பூஸா சிறைச்சாலையிலிருந்து தன்னை வெலிசறைகடற்படை முகாமிற்கு மாற்றுவதைத் தடுப்பதற்காகவே சமிந்த இதனைத் திட்டமிட்டுள்ளாரோ என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்த, தற்போது பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு இருந்தவாறே அவர் கையடக்கத்தொலைபேசி ஊடாகக் குற்றச் செயல்களை  வழிநடத்துவதாக கடந்த காலங்களில் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டிருந்தனர்.

இதனடிப்படையில், தெமட்டகொடை சமிந்தவை வெலிசறை கடற்படை முகாமிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு வைத்து அவர் படுகொலை செய்யப்படவுள்ளதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் வழிகாட்டலின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நீதிமன்றத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளிடமும் தெமட்டகொடை சமிந்தவிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

பூஸா சிறையிலிருந்து தன்னை வெலிசரவுக்கு மாற்றுவதைத் தடுப்பதற்காகவே தெமட்டகொடை சமிந்த இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருக்கலாம் என பொலிஸார் பலத்த சந்தேகம் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35