(லியோ நிரோஷ தர்ஷன்)
சீனாவின் 15-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் தெற்காசிய நாடுகளுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. இதில் குறிப்பாக, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் சீனாவின் ஈடுபாடு குறைந்து வரும் வேளையில், இலங்கையில் சீன முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இலங்கைக்கான முதலீட்டில் மாபெரும் பாய்ச்சல் 2025 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, சீனாவிற்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 200 பில்லியன் டொலர்களைத் தொட்டுள்ளது. இதில் இலங்கையின் பங்கு மிகவும் முக்கியமானது. பாக்கிஸ்தானில் சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் திட்டங்கள் 77வீதம் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், இலங்கையில் இந்த முதலீடுகள் 1,590 வீதம் என்ற பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
பூடானை தவிர மற்ற அனைத்து தெற்காசிய நாடுகளுக்கும் சீனாவே மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. குறிப்பாக இந்தியாவுடன் 100 பில்லியன் டொலர் மற்றும் இலங்கையுடன் 5 பில்லியன் டொலர் வர்த்தகத்தை சீனா மேற்கொண்டுள்ளது.
உலக வங்கியின் தரவுகளின்படி, சீனா தெற்காசிய நாடுகளுக்கு வழங்கியுள்ள கடன் தொகை 48 பில்லியன் டொலராக உயர்ந்துள்ள நிலையில், பாக்கிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகள் அதிக கடன் சுமை கொண்ட நாடுகளாக உள்ளன.
இலங்கையைப் பொறுத்தமட்டில், 2006 மற்றும் 2022-க்கு இடையில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக சீன அரச வங்கிகளிடமிருந்து 13.2 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை பெற்றுள்ளது.
நிதி நெருக்கடி காரணமாக 2017 ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போதிலும், தற்போது 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் திட்டத்தின் ஈடுபாடு வியக்கத்தக்க வகையில் 1,590 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக சினோபெக் நிறுவனம் மேற்கொள்ளும் 3.7 பில்லியன் டொலர் மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பார்க்கப்படுகிறது.
அதேசமயம், பாக்கிஸ்தானில் நிலவும் கடன் சிக்கல்கள் காரணமாக அங்கு சீனாவின் முதலீடுகள் 77 சதவீதம் குறைந்துள்ள நிலையில், பெய்ஜிங் தனது கவனத்தை தற்போது எரிசக்தி மற்றும் நுணுக்கமான முதலீட்டுத் தளங்களுக்கு மாற்றியுள்ளது. சீனாவின் இந்த 15-வது ஐந்தாண்டுத் திட்டம் தெற்காசிய நாடுகளின் பொருளாதாரச் சார்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM