( இணையத்தள செய்திப் பிரிவு )
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது விவசாய நிலத்திற்கு நீர் இறைக்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.
உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
தனது விவசாயச் செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்காக, மின்சார நீர் இறைக்கும் மோட்டாரை பொருத்த முயன்ற போதே மின்சாரம் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM