கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை: சந்தேகநபர் கைது!

Published By: Digital Desk 1

12 Apr, 2026 | 09:21 AM
image

(இணையத்தள செய்திப் பிரிவு)

ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவத்தில் போருவதண்ட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவரது அயல் வீட்டாருக்கும் இடையில் நிலவிய நீண்டகால தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

இதன்போது, தாக்குதலுக்குள்ளான நபர் பலத்த காயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47