( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு )
மேற்காசியாவில் நீடித்து வந்த பதற்ற நிலைமையின் மத்தியில், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை சுற்று நிறைவு பெற்றதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
சுமார் 14 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தை, 11 ஆம் திகதி சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு தரப்பும் எழுத்துபூர்வ ஆவணங்களை பரிமாறிக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கவும், அந்நாட்டு கடற்படை திறனை குறைக்கவும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை ஒழிக்கவும் என்ற நோக்கில், அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தது. இந்த நடவடிக்கையில் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்தது.
இதற்கு பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தியது. குறிப்பாக சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் உள்ள தளங்கள் தாக்குதலுக்குள்ளாகியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போரினை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, முழுமையான போர்நிறுத்தத்தை எட்டும் நோக்கில், பாகிஸ்தான் மத்தியஸ்தமாக செயல்பட்டு வருகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத் நகரில், அமெரிக்கா–ஈரான்–பாகிஸ்தான் முத்தரப்பு பேச்சுவார்த்தை 11 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகியது.
ஈரானின் அதிகாரிகள், அமெரிக்க குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் நடந்த நீண்ட பேச்சுவார்த்தை ஏறக்குறைய 14 மணிநேரம் நீடித்தது. இன்று 12 ஆம் திகதி அதிகாலை 3.40 மணி வரை பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இன்று 2 ஆவது நாளாக பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பு குழுவினரும் எழுத்து வடிவிலான ஆவணங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். நடந்து முடிந்த, தொடக்க கட்ட பேச்சுவார்த்தை பதற்றங்களை தணிப்பதற்கான பெரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதனுடன், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு புரிதல் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் பார்க்கப்படுகிறது. இரு தரப்பிலும், சில வேற்றுமைகள் காணப்பட்டபோதிலும் அமைதி பேச்சுவார்த்தை இன்று 2 ஆவது நாளாகவும் தொடரும் என்று கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே. டி. வான்ஸ் மற்றும் ஈரான் தரப்பில் பாராளுமன்ற சபாநாயகர் லைவர் மொஹமட் பாகர் காலிபாஃப் ( Mohammad Bagher Ghalibaf ) தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின் போது சில முக்கிய அம்சங்களில் உடன்பாடு எட்டப்படாததால், அவை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஹோர்மூஸ் நீரிணை தொடர்பான விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1979ஆம் ஆண்டு ஈரானிய புரட்சியின் பின்னர், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறும் முதன்மையான நேரடி பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேச்சுவார்த்தை, மேற்காசியாவில் நீடித்து வரும் மோதலுக்கு தீர்வு காணும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM