( இணையத்தள செய்திப் பிரிவு )
2009ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதி செயல்முறைகள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளும் நோக்கில், ஜனாதிபதியின் செயலாளர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இலங்கை நிலக்கரி தனியார் நிறுவனத்திற்கு அதிகாரபூர்வமாக சீல் வைக்கப்பட்டதுடன், அந்நிறுவனத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நிலக்கரி இறக்குமதியில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், 2009 முதல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இறக்குமதி நடவடிக்கைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
இதனடிப்படையில், ஜனாதிபதியின் செயலாளர் சனிக்கிழமை (11) முற்பகல் குற்றப்புலனாய்வுப் பிரிவில் உத்தியோகபூர்வ முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இந்த விசாரணையின் மூலம், கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், ஒப்பந்த நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், மற்றும் நிதி தொடர்பான முறைகேடுகள் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட உள்ளன.
மேலும், இந்த நடவடிக்கைகள் மூலம் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படுவதோடு, எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM