(நெவில் அன்தனி)
நியூ சண்டிகார் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (11) மாலை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 வீக்கெட்களால் வெற்றியீட்டிய பஞ்சாப் கிங்ஸ் நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் 3ஆவது வெற்றியை சுவைத்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 220 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ப்ரியான்ஷ் ஆரியா, ப்ரப்சிம்ரன் சிங், அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் பஞ்சாப் கிங்ஸை இலகுவாக வெற்றிபெறச் செய்தது.
r
ப்ரியான்ஷ் ஆரியா (57), ப்ரப்சிம்ரன் சிங் (51) ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 38 பந்துகளில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
மற்றொரு கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் (69 ஆ.இ.), நெஹால் வதீரா (14) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வெற்றியை அண்மிக்க செய்தனர்.
ஷஷாங் சிங் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து பஞ்சாபின் வெற்றியை உறுதிசெய்தார்.
பந்துவீச்சில் ஷிவாங் குமார் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.
அபிஷேக் ஷர்மா (74), ட்ரவிஸ் ஹெட் (34) ஆகிய இருவரும் 49 பந்துகளில் 120 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரமபத்தை இட்கொடுத்தனர்.
அவர்களை விட அணித் தலைவர் இஷான் கிஷான் 9270, ஹென்றிச் க்ளாசன் (39), அனிகெட் வர்மா (18) ஆகிய மூவரே 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷஷாங் சிங் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அர்ஷ்திப் சிங் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM