தயாரிப்பு : பாத்வே புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திர மௌலி, அபிநயா,கார்த்திக் குமார், படவா கோபி மற்றும் பலர்.
இயக்கம் : ராம் சக்ரி
மதிப்பீடு : 2/5
முன்னணி படைப்பாளுமைகளான சமுத்திரக்கனி- கௌதம் வாசுதேவ் மேனன் ,விருது பெற்ற திரைப்படங்களில் பங்களிப்பு செய்த நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி- ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருப்பதால் ,'கார்மேனி செல்வம் ' படைப்பு ஏதேனும் ஒரு வகையில் நல்லதொரு திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையில் பட மாளிகைக்கு சென்ற ரசிகர்களுக்கு... அவர்களின் நம்பிக்கை மகிழ்ச்சியை அளித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
பணக்கார தம்பதிகளான சம்பத்( கௌதம் வாசுதேவ் மேனன்) - தேவி ( அபிநயா) தம்பதிகளின் வாகனத்தை இயக்கும் சாரதியாக பணியாற்றுகிறார் செல்வம்( சமுத்திரக்கனி) . இவருக்கு சாந்தி ( லட்சுமி பிரியா சந்திர மௌலி) என்ற மனைவியும் பாலு ( கரண் சக்கரவர்த்தி) என்ற பிள்ளையும் இருக்கிறார்கள். இவர் கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். சொந்தமாக ஒரு வீடும், சொந்தமாக ஒரு நான்கு சக்கர வாகனமும் வாங்க வேண்டும் என்பதுதான்.. செல்வத்தின் வாழ்க்கை லட்சியம். இதற்காக தன்னுடைய உழைப்பில் கிடைக்கும் வருவாயை வீட்டில் உண்டியல் வைத்து சேமித்து வருகிறார். இந்த நிலையில் செல்வத்தின் சகோதரியின் வீட்டில் நடைபெறும் சுப வைபவத்தில் பங்கு பற்றும் போது.. தர்ம சங்கடமான சம்பவங்கள் ஏற்படுகிறது. இதனை செல்வம் எளிதாக எடுத்துக்கொண்டு கடக்க முயல.. சாந்தியால் அப்படி கடக்க முயலாமல் இமேஜ், கெத்து, மரியாதை என்ற வட்டத்திற்குள் சிக்குகிறாள். இதனால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சிந்தனை செல்வத்தை ஆக்கிரமிக்கிறது. இந்தத் தருணத்தில் அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக திகழும் சம்பத் - குடும்ப உறுப்பினர்கள் சகிதமாக வெளிநாடு செல்ல... அந்த வாகனத்தை செல்வம் வாடகைக்காக இயக்கத் தொடங்குகிறார். இந்தப் பயணத்தில் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களும்... அது தொடர்பான விளைவுகளும் தான்... படத்தின் கதை.
இப்படத்தை பார்க்கும் பார்வையாளர்கள் செல்வம் கதாபாத்திரத்தின் குணநலன்களை உணர்ந்த பிறகு தான் கதையுடன் இயல்பாக பயணிக்க இயலும். நேர்மை, எளிமை என தனக்கான வாழ்க்கை கோட்டை வரைந்து அதில் இயங்கும் செல்வம்.. சுயமாக சிந்திக்கத் தெரியாததால் மற்றவர்களின் சொல் புத்தியை கேட்கிறார். இதன் மூலம் 'அனுபவமே சிறந்த பட்டறிவு' என்ற விடயம் பார்வையாளர்களுக்கு புலப்படுகிறது.
இந்த கதாபாத்திரத்தை சமநிலைப் படுத்தும் வகையில் சுய தொழிலை செய்து கொண்டு குடும்பத்தின் மீதும் கணவன் மீதும் பிள்ளை மீதும் பேரன்பு கொண்டிருக்கும் சாந்தி கதாபாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்திருக்கிறார்.
பணம் சம்பாதிப்பதற்காக செல்வம் மேற்கொள்ளும் முயற்சிகள் அவருக்கு எதிர்மறையான பலன்களை வழங்க... கடன் கழுத்தை நெறிக்க... கடன் சுமையிலிருந்து தப்பிப்பதற்காக தன் உயிராக நினைக்கும் குடும்பத்தை துறந்து, தாயகத்திலிருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்கிறார் செல்வம். அங்கும் பெரிய செல்வந்தருக்கு சாரதியாக பணியாற்றும் இவருக்கு புதிய பணியிட சூழல் மற்றும் மனைவி, பிள்ளையின் பிரிவு ஆகியவை உளவியல் ரீதியாக பாரிய அதிர்வை ஏற்படுத்த... மனைவி மற்றும் பிள்ளைகளை தொடர்பு எல்லைக்கு அப்பால் நிறுத்திவிட்டு கடனுக்காக பாடுபடுகிறார் செல்வம். கடனை அடைக்கும் அளவிற்கு சம்பாதித்த பிறகு மீண்டும் தாயகம் திரும்புகிறார். அதன் பிறகு அவர் கடனை அடைத்து கம்பீரமாக தன் சொந்த வாழ்க்கையை தொடங்கினாரா? இல்லையா? இதற்கு காரணமான சம்பத்தை சந்தித்தாரா? அல்லது அவரை எப்படி எதிர்கொண்டார்? இது போன்ற வினாக்களுக்கு பதிலளிப்பது தான் இப்படத்தின் கதை.
முதல் பாதி திரைக்கதையில் இருந்த திரையரங்க தருணங்கள் இரண்டாம் பாதியில் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருப்பதாலும்... பல இடங்களில் தொலைக்காட்சி தொடரை பார்க்கிறோமோ..! என்ற எண்ணம் ஏற்படுவதாலும்... ரசிகர்களுக்கு முழுமையான திரையரங்க அனுபவம் கிடைக்கவில்லை.
இரண்டாம் பாதியில் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி... காலி காணியை விற்பனை செய்யும் பிரதிநிதி ... ஆகியோரின் திரை இருப்பு திரைக்கதைக்கு உத்வேகத்தை தருகிறது.
செல்வத்தை அவரது பிள்ளை பாலு, 'நீ அறிவாளிப்பா' என்று சொல்வதும் ... பின்னரான காட்சிகளில்,' உனக்கு அறிவே இல்லப்பா.!' என்று எதிரிடையாக சொல்லும் காட்சிகளிலும் இயக்குநரின் முத்திரை பளீச்.
பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுடன் வாழ்க்கை இருந்தாலும்... உறவுகளுடனும் குடும்ப அமைப்பில் மகிழ்ச்சியாக வாழ்வதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை இயல்பாக சொல்ல முயன்று.. இறுதியில் சற்று பிரச்சார த்வொனியுடன் நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்.
இப்படத்தில் பல சந்தர்ப்பங்கள் அமைந்தும்... தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஆன மது அருந்தும் காட்சியை இடம்பெறச் செய்யாததற்காகவே இயக்குநரை தாராளமாக பாராட்டலாம்.
நான்கு சக்கர வாகனத்தை இயக்கும் சாரதி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் சமுத்திரக்கனி. கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்து திரையில் மிளிர்வதால் ரசிகர்களை எளிதாக கவர்கிறார்.
சம்பத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் வாழ்க்கையை எப்படி வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதை சொல்லாமல் நடிப்பின் மூலம் பார்வையாளர்களுக்கு உணர்த்தி நடிப்பில் சபாஷ் பெறுகிறார்.
சாந்தி கதாபாத்திரத்தில் நடுத்தர வர்க்கத்து பெண்மணியை நூறு சதவீதம் திரையில் பிரதிபலித்து ரசிகர்களை வசப்படுத்துகிறார் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி.
தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை அபிநயாவும் தன் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்.
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் ஒரு சாரதியின் நினைவு குறிப்பிலிருந்து திரைக்கதை பயணிப்பது... படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எந்தவித சுவராசியத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஒளிப்பதிவு - பின்னணி இசை இந்த படைப்பிற்கு ஆகச் சிறந்த பலம்.
கார்மேனி செல்வம் - புரிதலுக்கான யாத்திரை.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM