(நெவில் அன்தனி)
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (11) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து ஏ அணியை 4 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை ஏ அணி, தொடரை 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாக கைப்பற்றியது.
காலியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 140 ஓட்டங்களாலும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 44 ஓட்டங்களாலும் இலங்கை ஏ அணி வெற்றிபெற்றிருந்தது.
கடைசிப் போட்டியில் காமில் மிஷார, பவன் ரத்நாயக்க, அஹான் விக்ரமசிங்க ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் இலங்கை ஏ அணியை வெற்றிபெறச் செய்தது.
இதன் காரணமாக நியூஸிலாந்து ஏ அணி சார்பாக முஹம்மத் அபாஸ் குவித்த ஆட்டம் இழக்காத சதம், மெத்யூ பொய்ல் பெற்ற அரைச் சதம் என்பன பலனற்றுப் போயின.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து ஏ அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்தது.
நியூஸிலாந்து ஏ அணியின் முதல் 3 விக்கெட்கள் 60 ஓட்டங்களுக்கு வீழ்ந்தன. ஆனால், முஹம்மத் அபாஸ் மூன்று முக்கிய இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி நியூஸிலாந்து ஏ அணியைப் பலப்படுத்தினார்.
மெத்யூ பொய்லுடன் 4ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களையும் மெக்ஸ் சூவுடன் 5ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களையும் டிம் ப்ரிங்க்ளுடன் 7ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களையும் முஹம்மத் அபாஸ் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.
முஹம்மத் அபாஸ் ஆட்டம் இழக்காமல் 110 ஓட்டங்களையும் மெத்யூ பொய்ல் 85 ஓட்டங்களையும் ரைஸ் மரியூ 28 ஓட்டங்களையும் ட்ம் ப்ரிங்ள் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
303 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 46.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
காமில் மிஷார (83), லசித் குரூஸ்புள்ளே 26) ஆகிய இருவரும் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து காமில் மிஷார, பவன் ரத்நாயக்க (77) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 130 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர். ஆனால் இருவரும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் களம் விட்டகன்றனர். (199 - 4 விக்.)
எனினும், அஹான் விக்ரமசிங்க ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களைப் பெற்றதுடன் அணித் தலைவர் சொனால் தினூஷவுடன் 5ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டார்.
சொனால் தினூஷ 26 ஓட்டங்களைப் பெற்றதுடன் மிலன் ரத்நாயக்க 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
தொடர்ந்து அஹான் விக்ரமசிங்கவும் விஜயகாந்த் வியாஸ்காந்தும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றி அடையச் செய்தனர்.
பந்துவிச்சில் சைமன் கீன் 54 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டிம் ப்ரிங்ள் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: அஹான் விக்ரமசிங்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM