இணையவழி ஊடாக போலிச் செய்திகளை பேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்டக் கட்டமைப்பை விரிவுபடுத்த இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த வாரம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு இந்தியாவின் டிஜிட்டல் ஊடக உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்களை முன்மொழிந்தது.
இதன்படி, 'செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்கள்' தொடர்பான உள்ளடக்கங்களைப் பகிர்ந்துகொள்ளும் 'பதிவு செய்யப்படாத பயனர்'களையும், தற்போதுள்ள செய்தி நிறுவனங்களுக்குப் பொருந்தும் 'நடத்தை விதிமுறை'களுக்குள் கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ளது.
சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் வலையொளியாளர்கள் உள்ளிட்ட சாதாரண பயனர்களால் பகிரப்படும் செய்தி தொடர்பான பதிவுகள் மீது அரசாங்கம் அதிக அதிகாரத்தைப் பெற இது வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பயனர்களால் பகிரப்படும் உள்ளடக்கங்களுக்கு சட்டப்படியான பொறுப்பை ஏற்க வேண்டுமாயின், சமூக ஊடகத் தளங்கள் அரசாங்கத்தின் உத்தரவுகள் மற்றும் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்மொழியப்பட்ட திருத்தங்கள் டிஜிட்டல் உரிமை ஆர்வலர்கள் மற்றும் சுயாதீன செய்தி உருவாக்குநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இது சமூக ஊடகத் தளங்களில் தணிக்கைக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கின்றனர்.
விமர்சகர்களை இலக்கு வைக்கவும், மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கவும் இந்தச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்தத் திருத்தங்கள் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டங்களை வலுப்படுத்தும் என்றும், போலிச் செய்திகள், வெறுப்புப் பேச்சுகள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் இந்திய அரசாங்கம் கூறுகிறது. இது குறித்த பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 14ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM