லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் : மூவர் பலி

Published By: Digital Desk 2

11 Apr, 2026 | 06:16 PM
image

லெபனான் மீது இஸ்ரேல் இன்று (11) நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல குடியிருப்பு கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு ஜெப்சிட் நகரமும் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 2024இல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தபோதிலும், மார்ச் 2 ஹிஸ்புல்லா நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் தெற்கு லெபனானில் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்தப் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் அமெரிக்கா முன்னெடுக்கவுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் பிரதிநிதிகள் பங்கேற்கும் நேரடிப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் வொஷிங்டனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரான் மீதான போரை இரண்டு வார காலத்துக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தார்.

அதையே, லெபனான் விவகாரத்திலும் பின்பற்ற அமெரிக்கா முயன்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதை லெபனான் அரச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11
news-image

17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்...

2026-05-11 11:13:00
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பொலிஸ்...

2026-05-10 14:50:25
news-image

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது -...

2026-05-10 13:09:10