T N 2026 தங்க நட்சத்திரம் - திரைப்பட விமர்சனம்

11 Apr, 2026 | 03:06 PM
image

T N 2026 தங்க நட்சத்திரம் - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : கண்ணன் ரவி குழுமம்

நடிகர்கள் : நட்டி நட்ராஜ், தம்பி ராமையா,  ரெடின் கிங்ஸ்லி, விஜி சந்திரசேகர், எம் எஸ் பாஸ்கர், இளவரசு , சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் மற்றும் பலர்.

இயக்கம் : உமாபதி ராமையா

மதிப்பீடு : 2.5/5

இந்த படத்தின் முன்னோட்டம் வெளியான உடன் தமிழக அரசியல் களத்தில் புதிதாக தடம் பதிக்கும் நட்சத்திர நடிகரின் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கொதித்து எழுந்து எதிர்வினை ஆற்றினர். இதனால் படத்தைக் காண வேண்டும் என்ற உந்துதல் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பல எதிர்பார்ப்புகளுடன் இப்படத்தை காண சென்ற ரசிகர்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்பு வீணானதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமாகிறார் குல்கந்து குமார்( நட்டி நட்ராஜ்) . இவர் நடித்த ஒரு படத்தை பார்த்த சிவலிங்கம் ( தம்பி ராமையா) எனும் மிகப்பெரிய செல்வந்தர், குல்கந்து குமாரிடம் நெருக்கமாக பழகி அவரை வைத்து படத்தை தயாரித்து அவரின் நட்சத்திர அந்தஸ்தை 'கோல்டன் ஸ்டார்' என்ற அளவிற்கு உயர்த்துகிறார். அதன் பிறகு அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என சிவலிங்கம் விரும்புகிறார். சிவலிங்கத்தின் விருப்பத்தை ஒரு புள்ளியில் தெரிந்து கொள்ளும் குல்கந்து குமார் அரசியலில் இறங்க தீர்மானிக்கிறார். ஆத்திக நாத்திக முன்னேற்ற கழகம் என்றதொரு கட்சியையும் தொடங்குகிறார். அரசியலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என நினைக்கிறார். அவருடைய எண்ணம் பலித்ததா? இல்லையா? அரசியலில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதை.

முதல் பாதியில் குல்கந்து குமார் கதாபாத்திர அறிமுகம்- அவர் சினிமாவில் வளர்வதற்காக போராடும் காட்சி - அவருக்கு சிவலிங்கம் எனும் தனவந்தரின் ஆதரவு- ரசிகர்கள் தயாரிப்பாளர்கள் நடிகைகள் என கலகலவென உற்சாகமாக பயணிக்கிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் நட்சத்திர நடிகர் ஒருவர் அரசியலில் இறங்கி விட்டால்.. அரசியலில் இருக்கும் தொண்டர்கள் நிர்வாகிகள் அனுதாபிகள் விசுவாசிகள்.. அவர்களின் அரசியல் சதி சூழ்ச்சி ஆகியவை இருந்தாலும்.. ஒரே தளத்தில் சுற்றி சுற்றி வருவதால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை விட சோர்வு தான் மிஞ்சுகிறது. அதிலும் பல காட்சி அமைப்புகளும் உரையாடலும் சமூக வலைதளங்களில் வெளியான காணொளியை நினைவுபடுத்துவதால் சுவராசியம் குறைகிறது.

அரசியலை பின்னினியாக கொண்ட படம் -அதனை கொமடியாக சொல்ல வேண்டும் என படக் குழுவினர் ஏற்படுத்திக் கொண்ட சுய கட்டுப்பாடு - ஏராளமான பிரபலமான முகங்கள்- நிஜ சம்பவங்களை பிரதிபலிக்கும் காட்சி அமைப்பு- திரை நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுபட்டால் அவர்களைப் பற்றிய வாக்காளர்களின் மனநிலை மற்றும் புரிதல் தொடர்பான காட்சிகள் அல்லது உரையாடலில் பகடித்தனம் - என பல அம்சங்களை இணைத்த கதாசிரியர் தம்பி ராமையா.. இவை அனைத்தும் குல்கந்து குமார் எனும் கற்பனையான உச்ச நட்சத்திர நடிகரின் பார்வையில் விவரித்திருப்பது தான் பலம் மற்றும் பலவீனம்.

சிவலிங்கம் எனும் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய ஜமீன்தாராக தோன்றும் தம்பி ராமையா கதையை அழகாக வழி நடத்திச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.

இவரைத் தொடர்ந்து குல்கந்து குமார் எனும் நடிகர் வேடத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் - இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார். அதிலும் அவருடைய நடனம் சுப்பர்.

எம் எஸ் பாஸ்கர், இளவரசு ஆகியோரை விட ..சிங்கராஜ் கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி கவனம் ஈர்க்கிறார். 

ஒளிப்பதிவு ...பின்னணி இசை... இவை இரண்டும் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் டானிக்.

தமிழக அரசியலில் தற்போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான தேர்தல் அரசியல்... அது தொடர்பான பிரச்சாரம் உச்சத்தை எட்டி இருக்கும் தருணத்தில்... வாக்காளர்களுக்கு திரை நட்சத்திரம் குறித்த அரசியல் ரீதியான புரிதலை இப்படம் ஏற்படுத்தினால் அதுவே படக்குழுவின் வெற்றி. 

TN 2026 தங்க நட்சத்திரம் - நோட்டா (NOTA) வாக்கு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விமல் - ஸ்ரேயா சரண்...

2026-09-15 15:08:53
news-image

நடிகை அஞ்சலி நாயரின் நடனத்தில் வெளியான...

2026-09-15 15:08:29
news-image

நடிகர் 'சியான்' விக்ரம் நடிக்கும் :'பவர்...

2026-09-15 14:59:36
news-image

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் 'தி கிராண்ட்...

2026-09-15 14:58:32
news-image

நடிகை கோமலீ பிரசாத் நடிக்கும் 'மண்ட...

2026-09-15 14:46:21
news-image

ராஷ்மிகா மந்தானா நடிப்பில் திரைப்படமாகும் 'பாரத...

2026-09-15 14:46:05
news-image

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனி முத்திரை...

2026-09-15 14:43:55
news-image

கடலோர பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள சட்டவிரோத...

2026-09-14 16:24:05
news-image

இசைஞானி இளையராஜாவின் ஆசிர்வாதத்துடன் தொடங்கிய 'ராவணன்...

2026-09-14 15:19:33
news-image

துருவ் விக்ரம் நடிக்கும் 'ஜாக்கி' படத்தின்...

2026-09-14 15:19:03
news-image

நடிகை ரைசா வில்சன் நடிக்கும் 'நோவா:...

2026-09-14 15:18:50
news-image

நாட்டார் கதையை பின்னணியாக கொண்ட 'தி...

2026-09-14 15:18:29