இன்றைய வாழ்க்கை நடைமுறையில் எம்முடைய இளைய தலைமுறை கால்களையும், முழங்கால்களையும் பாவிக்கும் போக்கில் முறையற்ற அணுகுமுறையை தொடர்ந்து கடைபிடிப்பதால்... அவர்கள் மத்திம வயதிலேயே மூட்டு வலி பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.
மருத்துவ மொழியில் ஓஸ்டியோமலாசியா என குறிப்பிடப்படும் மூட்டு வலி பாதிப்பிற்கு தற்போது நவீன முறையில் சிகிச்சைகள் அறிமுகம் ஆகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய கால் மூட்டு பகுதியில் தொடை எலும்பு- கால் எலும்பு மற்றும் எலும்பு மூட்டை பாதுகாக்கும் பட்டெல்லா எனும் எலும்பு என மூன்று வகையினதான எலும்புகளின் ஒருங்கிணைப்பு அமைந்துள்ளது.
இதில் மூன்றாவதாக அமைந்துள்ள எலும்பின் கீழ் பகுதியில் உள்ள குருத்தெலும்பில் பாதிப்பு ஏற்பட்டால்... அதனை ஓஸ்டியோமலாசியா என மருத்துவ மொழியில் குறிப்பிடுகிறார்கள்.
எலும்புகள் அதனுடைய அடர்த்தியை இழந்து மென்மையாவதை இத்தகைய பாதிப்பு குறிப்பிடுகிறது. குறிப்பாக இங்குள்ள குருத்தெலும்புகள் வலுவானதாக இருக்கும். இந்த வலிமையில் குறைவு ஏற்பட்டால்.. அதனை ஓஸ்டியோமலாசியா என குறிப்பிடலாம். மூட்டு வலி, தசை பலவீனம், நடப்பதில் அசௌகரியம் ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
விற்றமின் டி சத்து குறைபாடு ஏற்பட்டால் இத்தகைய பாதிப்பு ஏற்படும். இது குனிவதாலும் அல்லது விபத்தாலும் அல்லது முதுமையாலும் எலும்பு முறிவு ஏற்படும் பாதிப்பை அதிகரிக்கும். எம்முடைய உடல் கால்சியம் சத்தை போதுமான அளவிற்கு உறிஞ்சுவதில் சமச்சீரற்ற தன்மை, விற்றமின் டி குறைபாடு, பாஸ்பேட் எனும் சத்தின் அளவு குறைபாடு, கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
இத்தகைய பாதிப்பை எக்ஸ்ரே பரிசோதனையை விட எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானிக்க இயலும். சிலருக்கு எலும்பு தாதுவின் அடர்த்தி தொடர்பான பரிசோதனையையும், எலும்பு திசு பரிசோதனையும் அவசியப்படலாம்.
அதனைத் தொடர்ந்து மருந்தியல் சிகிச்சை- வாழ்க்கை நடைமுறை மாற்றம் மற்றும் சிறிய அளவிலான நவீன மருத்துவத் தொழில் நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர்.
வைத்தியர் தினேஷ் தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM