ஆணழகன் - பத்திரிக்கையாளர்- விநியோகஸ்தர்- தயாரிப்பாளர் - அரசியல்வாதி -மேடைப் பேச்சாளர் - என பன்முக ஆளுமை திறன் வாய்ந்த நடிகர் சரத்குமார் நடிப்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் 'மிஸ்டர் எக்ஸ்' அவர் நடிப்பில் உருவான 172வது படம் என அவரே உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படத்தில் ஆர் .சரத்குமார், ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருக்கிறார். ஸ்பை திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் . லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மேவரிக் மூவிஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதன் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பட குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் பங்கு பற்றி நடிகர் ஆர். சரத்குமார் பேசுகையில், '' மிஸ்டர் எக்ஸ் எம்முடைய நடிப்பில் வெளியாகும் 172வது படம். இப்படத்தின் கதையை இயக்குநர் சொல்லும் போது வியப்படைந்தேன்.
போரில் பங்கேற்கும் இராணுவ வீரர்களுக்கு பரம்வீர் சக்கரா உள்ளிட்ட உயரிய விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். ஆனால் எமது நாட்டை பாதுகாப்பதற்காக வெளிநாடுகளில் தங்கியிருந்து உளவாளிகளாக வேலை செய்வது யாருக்கும் வெளியே தெரியாது.
அதை வெளியில் சொல்லவும் முடியாது. தன் மனைவிக்கு கூட தான் யார் என்ற உண்மையை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட முகம் வெளியில் தெரியாத ஹீரோக்களை நாம் பாராட்ட வேண்டும் என்றால்.. இது போன்ற படங்களை எடுத்து தான் பாராட்ட முடியும்.
பிரம்மாண்ட பட்ஜட்டில் நட்சத்திர பட்டாளங்களுடன் இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் அனைவருக்கும் நன்றியும் , பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு நாம் சிறந்த கௌரவத்தை வழங்க இயலும்'' என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM