தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் நடிகர்கள் -நடிகைகள் -இயக்குநர்கள்- தயாரிப்பாளர்கள்- என பல கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களில் சிலருக்கே ரசிகர்கள் வெற்றி மாலையை சூட்டுகிறார்கள்.
இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் புதுமுக நடிகர் ராணவ் கதையின் நாயகனாக 'பிரேக் பாஸ்ட் ' படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகை ரீமாசென் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ஏ ஆர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிரேக் பாஸ்ட்' திரைப்படத்தில் ராணவ் , ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி , அர்ச்சனா , கார்த்திக் மோகன், அமிதா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கிரிஜா வரதராஜ் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் காதலர்களுக்கு இடையே திருமணம் தொடர்பாக ஏற்படும் கருத்தியல் முரண்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM