அனுராதபுரம் - வெஸ்ஸகிரிய வீதியில் வேன் ஒன்றினுள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையினை சேர்ந்த ஆசிரியரும் அதிபரும் காதல் லீலை புரிந்து கொண்டிருந்த வேளையில் அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிபரும் ஆசிரியரும் கடந்த வெள்ளிகிழமையன்று மரண வீட்டிற்கு செல்வதாக தெரிவித்து  தங்களின் வீட்டுகளிலிருந்து வெளியேறிய இருவரும் இரவுவேளையில் மரணவீட்டிற்கு செல்லாமல் வேனில் காதல் லீலையில் ஈடுப்பட்டுள்ளனர்.

வெஸ்ஸகிரியவில் அமைந்துள்ள விகாரையொன்றிற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றினுள்ளே குறித்த இருவரும் காதல் லீலையில் ஈடுப்பட்டிருந்ததாகவும், அவ்வழியில் பயணித்த பொலிஸார் குறித்த வேன் மீது சந்தேகம் கொண்டு அருகில் சென்று மீன்விளக்கினை ஒளிர செய்து பார்த்த வேளையிலேயே அவர்கள் இருவரும் சிக்குண்டுள்ளனர்.

பொலிஸார் அருகாமையில் இருப்பதை கூட அறியாது இருவரும் காதல் லீலையில் முழ்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரையும் கடுமையாக எச்சரித்து அவ்விடத்திலிருந்து பொலிஸார் அவர்களை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.