கொக்கட்டிச்சோலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ; சந்தேக நபர்கள் 6 பேருக்கும் விளக்கமறியல் 

11 Apr, 2026 | 01:52 PM
image

மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண்னொருவர் உயிருடன் மீட்கப்பட்டமை, மற்றுமொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இவ்வழக்கு தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை (10) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது.

நீதவான் நீதிமன்றம் நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, கடத்தல், கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களையும் இரண்டு நகைக்கடை உரிமையாளர்களையும் இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இன்று இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் மட்டுமே நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படாமல் நிகழ்நிலை ஊடாக இவ்வழக்கு தொடர்பிலான விசாரணை நடத்தப்பட்டது.

இதன்போது இவ்வழக்கில் கைதான சந்தேக நபர்கள் 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இந்த வழக்கு தொடர்பான மறுவிசாரணை இம்மாதம் 15ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35