சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர் திரும்பும் மக்களால் களைகட்டும் புறக்கோட்டை பஸ்தரிப்பு நிலையம்

Published By: Digital Desk 2

11 Apr, 2026 | 01:55 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

சித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் புரியும் மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக இன்று (11) காலை முதல் கொழும்பு புறக்கோட்டை தனியார் பஸ்தரிப்பு நிலையத்தில் திரண்டு வருகின்றனர். 

நுவரெலியா, கண்டி மற்றும் மாரவில உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களுக்கும் செல்லும் பயணிகள் பஸ்தரிப்பு நிலையத்தில் அதிகளவில் கூடியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

பயணிகளின் வருகை வழமையை விட அதிகமாகக் காணப்பட்டபோதிலும், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த பயணிகள், பஸ்தரிப்பு நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், தாராளமான முறையில் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் எவ்வித சிரமமுமின்றி தமது பயணங்களை மேற்கொள்ள முடிவதாகத் தெரிவித்தனர்.

குறிப்பாக, நுவரெலியா போன்ற தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் நீண்ட நேரக் காத்திருப்பின்றி பஸ்களைப் பெற்றுக்கொள்ள முடிவதாகத் திருப்தி வெளியிட்டனர்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் தமது ஊர்களுக்குச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.

நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் அனைவரும் இன மத பேதமின்றி ஒருமித்த உணர்வுடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35
news-image

வாடகை வீடுகள் மூலம் நிதி மோசடிகள்:...

2026-05-11 16:18:22