சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில் கைது!

Published By: Digital Desk 1

11 Apr, 2026 | 02:28 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

சுமார் 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று சனிக்கிழமை (11) அதிகாலை 12.50 மணியளவில் வருகை தந்த விமானம் மூலம் குறித்த பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

35 வயதுடைய சீன நாட்டு பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 26,100 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுங்க அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகுதி அரசுடைமையாக்கப்பட்டது.

அத்துடன், குறித்த சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23